For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காமன்வெல்த் மாநாட்டில் இருந்து இலங்கையை நீக்க காமன்வெல்த் சட்ட மாநாட்டில் தீர்மானம்!

By Mathi
Google Oneindia Tamil News

Commonwealth Lawyers Association passes a resolution against Sri lanka
கேப்டவுன்: காமன்வெல்த் மாநாட்டில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற காமன்வெல்த் அமைப்பின் சட்ட வல்லுநர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கேப்டவுன் நகரில் காமன்வெல்த் அமைப்பின் 18 வது சட்ட வல்லுநர் சங்க மாநாட்டு நடைபெற்றது. இம்மாநாட்டில் இங்கிலாந்து, வேல்ஸ் ஆகியவற்றின் சட்ட வல்லுநர் சங்கம், காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று கோரியுள்ளன. இது, சர்வதேச அளவிலான தீர்மானத்துக்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

காமன்வெல்த் அமைப்பின் வழக்கறிஞர்கள் சங்க மாநாட்டில், காமன்வெல்த் சட்டக் கல்வி கூட்டமைப்பு, காமன்வெல்த் மேஜித்ரேட் மற்றும் நீதிபதிகள் அமைப்பு ஆகியவையும் பங்கேற்று தீர்மானத்தை தாக்கல் செய்தன. இந்தத் தீர்மானத்தில், வன்முறைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இலங்கையை காமன்வெல்த் நாடுகளின் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் நிறைந்த நாட்டில் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை நடத்துவது காமன்வெல்த் அமைப்பின் கொள்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஆகியவை பற்றி கேள்வி எழுப்ப வாய்ப்பு ஏற்படும். எனவே நவம்பர் மாதம் இலங்கையில் நடத்தப்படவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை வேறு நாட்டில் நடத்துவது தொடர்பாக காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு ஆலோசிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 26ந் தேதி நடைபெறும் காமன்வெல்த் அமைச்சர்களின் செயற்குழுக் கூட்டத்தில் இலங்கை விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட வேண்டும் என்றும் அதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

English summary
The Commonwealth Lawyers Association yesterday, passed a resolution on Sri Lanka calling for the island to be suspended from the commonwealth over allegations of serious and persistent violations of the Commonwealth fundamental values.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X