For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இப்பவே 910 கோடி சொத்து... அப்போ ஜெயிச்சா?: கோடீஸ்வரர்கள் களமிறங்கும் கர்நாடக சட்டசபை தேர்தல்

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரியா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு ரூ.910 கோடி என சொத்து விவரத் தாக்கல் செய்துள்ளார்.

கர்நாடக மாநில சட்டசபைக்கு வருகிற மே 5-ந் தேதி தேர்தல் நடக்கிறது. தற்போது அங்கு மனு தாக்கல் முடிந்து தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பை எட்டியுள்ளது. வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவுடன் சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளனர்.

அதில் பலர் கோடீஸ்வர வேட்பாளர்கள் என தெரிய வந்துள்ளது. அவர்களது சொத்து மதிப்பு ரூ.100 கோடிக்கும் அதிகம் உள்ளது.

நா தான் பர்ஸ்ட்...

காங்கிரஸ் வேட்பாளர் பிரிய கிருஷ்ணாவின் சொத்து மதிப்பு ரூ.911 கோடி. இவர்தான் கர்நாடக தேர்தலில் போட்டியிடும் கோடீஸ்வர வேட்பாளர்களில் முதன்மையானவர். பிரிய கிருஷ்ணா எம்.ஏ., எல்.எல்.பி. (சட்டம்) படித்தவர் 29 வயதாகிறது. இவரது தந்தை எம்.கிருஷ்ணப்பா ரியல் எஸ்டேட் தொழில் அதிபரான இவர் காங்கிரசில் ஈடுபாடு கொண்டவர்.

அப்போ கோல்ப் ஸ்டிக்... இப்ப பாலிடிக்ஸ்

தந்தையும் தற்போது விஜய நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். பிரிய கிருஷ்ணாவும் தொழில் நிறுவனங்களை நடத்தி வந்தார். தந்தையைப் போல் அவரும் காங்கிரசில் சேர்த்து கட்சிப் பணியாற்றினார். சட்டமன்ற பாராளு மன்ற தேர்தல் பிராசாரத்தில் ஈடுபட்டு வந்தார். பிரிய கிருஷ்ணா சிறந்த "கோல்ப்" விளையாட்டு வீரர் .

திரும்பவும் அதே தொகுதி தான்...

2001-ம் ஆண்டு பஞ்சாபில் நடந்த தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்றார். கடந்த சட்டசபை தேர்தலில் இவர் கோவிந்தராஜ் நகர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது மீண்டும் கோவிந்தராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

அடுத்தது சுரங்க அதிபர்...

இவருக்கு அடுத்தபடியாக சந்தோஷ் என்ற காங்கிரஸ் வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.186.40 கோடியாகும். இவர் சுரங்க தொழில் அதிபர் ஆவார்.

எல்லாருமே கேடிங்க தான்... சாரி, சாரி கோடிங்க தான்

மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமியின் சொத்து மதிப்பு ரூ.123 கோடி என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு காங்கிரஸ் வேட்பாளரான தேஷ்பாண்டேயின் சொத்து மதிப்பு ரூ.113.93 கோடி, பாரதீய ஜனதா வேட்பாளர் ஆனந்த் சிங்கின் சொத்து மதிப்பு ரூ.104.50 கோடி ஆகும். பிரபல ரியல் எஸ்டேட் அதிபரான நந்தியேஷ் ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.107.05 கோடி. இவர் பாரதீய ஜனதா வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் பெங்களூர், மைசூர், மங்களூர், தும்கூர், ஹசன், சிமோகா ஆகிய நகரங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

கல்விலயும் கலந்தது அரசியல்...

கர்நாடகத்தின் பிரபல கல்வியாளரான சாமனூர் சிவசங்கரப்பாவும் தேர்தலில் குதித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.67 கோடி. பாபுஜி கல்வி அறக்கட்டளை நடத்தி வருகிறார்.

ஓவர் கண்காணிப்பு...

இது போல் பல தொழில் அதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், கல்வியாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். அங்கு தேர்தலில் பண புழக்கம் அதிக அளவில் இருக்கும் என்று கருதி தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

English summary
Young and suave Priya Krishna, seeking re-election as Congress candidate from a city constituency for May 5 Assembly polls, has retained his status of the richest candidate with assets of over Rs. 910 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X