For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஸ்டன் குண்டுவெடிப்பு: ஹீரோ ஆன இந்திய அமெரிக்க டாக்டர்

Google Oneindia Tamil News

பாஸ்டன்: இந்திய- அமெரிக்க எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் விவேக் ஷா பாஸ்டன் குண்டுவெடிப்பின் மூலம் அமெரிக்க மக்களின் மனதில் ஹீரோவாக ஆகிவிட்டார்.

3 பேரை பலி வாங்கிய பாஸ்டன் குண்டுவெடிப்பில் 180 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்து உதவி இருக்கிறார் டாக்டர் ஷா.

பாஸ்டனில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார் ஷா. ஷாவும், அவருடன் பணி புரிபவர்களும் முதலில் பெரும் சத்தம் கேட்டு, என்ன நடந்ததென புரியாமல் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். ஆனால் அவர்கள் சென்றடையும் முன் இரண்டாவது குண்டும் வெடித்துவிட்டது.

Boston blasts
ஷாவின் குடும்பத்தினர் அனைவருமே குண்டுவெடிப்பு நடைபெற்ற பகுதியில் தான் இருந்துள்ளனர். எனவே, சம்பவ இடத்தை நோக்கி விரைந்துள்ளார்.

இது குறித்து ஷா கூறுகையில்,

மக்கள் ஒரு காலை அல்லது இரண்டு காலையும் இழந்து அதிர்ச்சிகரமான காயங்களோடு காணப்பட்டனர். நான் இதற்கு முன் இவ்வளவு காயமடைந்தவர்களை இதுபோல் ஒருசேர கண்டதில்லை. உடனடி மருத்துவ உதவி தேவைப்படுவோர் யார் என நான் பரிசீலித்துக் கொண்டிருந்தேன். யாருக்காவது அதிகப்படியான ரத்த இழப்பு ஏற்பட்டுள்ளதா என சோதித்தேன்.

சிறிது நேரத்திலேயே தேவையான மருத்துவ அதிகாரிகள் வந்து காயம் பட்டவர்களுக்கான மருத்துவ தேவைகளை கவனிக்கத் தொடங்கி விட்டனர்.

பிறகு நான் எனது குடும்பத்தினரைத் தேட ஆரம்பித்தேன். கூட்டத்தில் அவர்களுடைய முகம் எங்காவது தெரிகிறதா என பார்த்தேன். நல்ல வேளையாக எனது குடும்பத்தினர் பாதுகாப்பாகவே இருந்தனர் என்றார்.

அவர்கள் இருந்த இடத்திற்கும் சம்பவ இடத்திற்கும் சுமார் 25 யார்டு இடைவெளியே இருந்ததாம்.

English summary
An Indian-American orthopaedic surgeon, who participated the ill-fated Boston Marathon, emerged as a 'hero' by providing first aid to victims after the twin bombings ripped through a cheering crowd, killed three people and injured over 180 others.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X