For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஸ்டன் குண்டுவெடிப்பு: போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் செசன்ய தீவிரவாதி சாவு- சகோதரனுக்கு வலை

By Chakra
Google Oneindia Tamil News

பாஸ்டன்: அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் நடந்த மாரதான் போட்டியில் குண்டு வைத்தது தொடர்பாக தேடப்பட்டு வந்த ஒரு தீவிரவாதி போலீசுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பலியானான். இன்னொரு நபரான அவனது தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த இருவரும் செசன்யா அருகே உள்ள ரஷ்ய பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்களது பெயர் தமேர்லான் சர்னயேவ் (26), ஷோக்கர் (19). இருவரும் கல்வி பயில சில வருடங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு வந்தவர்கள். இருவருக்கும் அல்கொய்தாவுக்கும் தொடர்பிருக்கலாம் என்று தெரிகிறது.

போலீசுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அண்ணனான தமேர்லான் பலியாகியுள்ளார். ஷோக்கர் தப்பியோடிவிட்டார். அவரைப் பிடிக்க ஆயிரக்கணக்கான போலீசார் களத்தில் இறங்கியுள்ளனர்.

முன்னதாக இந்த விவகாரத்தில் சந்தேகத்துக்குரிய இந்த இருவரது படங்களையும் அமெரிக்க விசாரணை அமைப்பான எப்பிஐ வெளியிட்டது. சம்பவம் நடந்த பாயில்ஸ்டன் தெருவில் உள்ள சிசிடிவிக்களில் பதிவாகியுள்ள வீடியோக்களை வைத்து இரண்டு நபர்கள் மீது எப்பிஐக்கு சந்தேகம் ஏற்பட்டது.

{photo-feature}

English summary
Boston authorities say they have shot and killed "Suspect 1" in the Boston Marathon bombing while "Suspect 2" is on the run after a standoff in Watertown, Mass. Boston Police Chief Ed Davis tweeted: "One suspect dead. One at large. Armed and dangerous. White hat suspect at large."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X