For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பீரைக் கேட்ட பிளாஸ்டிக் தாளையா தாரீங்க... கட்டுங்கடா 50,000 அபராதம்

Google Oneindia Tamil News

Unhygenic beer : United breweries told to pay Rs 50,000 to advocate
ஐதராபாத்: சுகாதாரமற்ற 'பீர்' விற்பனை செய்த பிரபல மது ஆலைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொதுவா பார்ட்டிகளில் மது சாப்பிட்டு மகிழ்வதற்காக விதவிதமான வகைகளில், ருசிகளில் மதுபானங்கள் வாக்கி வைப்பார்கள். ஆனால், பீர் பாட்டிலுக்குள் பிளாஸ்டிக் பேப்பர் வந்து விருந்தினரை படுத்தி எடுத்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த ஜகன் என்ற வழக்கறிஞர் தனது மகனின் பெயர் சூட்டு விழாவை கொண்டாடுவதற்காக 9-10-2011 அன்று உள்ளூர் மதுக்கடை ஒன்றில் 2 பெட்டி பிரபல பீர்பாட்டில்களை வாங்கியுள்ளார்.

போதை வரல... மயக்கம் தான் வந்தது

ஒரு பாட்டிலில் இருந்த பீரை குடித்த விருந்தினர் மயங்கி விழுந்தாராம். அவரை அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதித்தபோது பீரில் சுகாதாரமற்ற பொருள் கலந்திருக்கக்கூடும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

பீருக்குள்ள பிளாஸ்டிக்...

அவர் குடித்த பீர் பாட்டிலை ஜகன் பரிசோதித்த போது புட்டியின் உள்ளே 6 அங்குல நீளத்தில் பழைய பிளாஸ்டிக் உறை ஒன்று கிடந்தது.

அதுக்கெல்லாம் நாங்கலா பொறுப்பு...

உள்ளூர் மதுக்கடையில் ஜகன் விசாரித்தபோது அவர்கள் பொறுப்பான பதில் எதுவும் கூறாததால் அவர் ரங்காரெட்டி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அபராதம் 50,000...

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுகாதாரமற்ற பீரை விற்ற மது ஆலைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

English summary
Giving hope to thousands of consumers who silently put up with unhygienically packaged beverages, the Consumer Forum has ordered United Breweries to pay Rs 50,000 compensation to an advocate for supplying Kingfisher strong beer with a six-inch polythene cover inside the bottle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X