For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கற்பழிக்கப்பட்ட 5 வயது சிறுமிக்கு நடந்தது என்ன? தற்போதைய நிலை என்ன?

By Siva
Google Oneindia Tamil News

Delhi rape: Victim underwent unspeakable torture
டெல்லி: டெல்லியில் 2 பேரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட 5 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

கிழக்கு டெல்லியில் உள்ள காந்தி நகரைச் சேர்ந்த 5 வயது சிறுமி கடந்த 15ம் தேதி தனது வீட்டு வாசலில் இருந்து கடத்தப்பட்டார். அதே குடியிருப்பில் தரைதளத்தில் இருக்கும் பீகாரைச் மனோஜ் குமார்(22), அவரது கூட்டாளி பிரதீப்புடன் சேர்ந்து சிறுமியை 2 நாட்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் ஒரு அறைக்குள் அடைத்து வைத்து கற்பழித்தார்.

கடந்த புதன்கிழை மாலை சிறுமியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து வெளியே பூட்டப்பட்டிருந்த அறையை திறந்தபோது சிறுமி பரிதாபமான கோலத்தில் இருந்தார். இதையடுத்து சுவாமி தயானந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் பிறகு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சிறுமிக்கு நடந்த கொடூரங்கள்:

சிறுமியை மனோஜ் மற்றும் பிரதீப் இயற்கைக்கு புறம்பான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர் சிறுமியின் மர்ம உறுப்புகளை சேதப்படுத்தியுள்ளனர்.

மர்ம உறுப்புகள் வழியாக சிறுமியின் உடலுக்குள் 200 மில்லி லிட்டர் பாட்டில் மற்றும் மெழுகுவர்த்தி துண்டுகளை திணித்துள்ளனர்.

மருத்துவர்கள் பாட்டில் மற்றும் மெழுகுவர்த்தி துண்டுகளை அகற்றிவிட்டனர்.

ஒரு 5 வயது சிறுமிக்கு இவ்வளவு கொடுமை நடந்துள்ளதை தனது வாழ்நாளில் பார்த்ததில்லை என்று சுவாமி தயானந்த் மருத்துவமனை அதிகாரி ஆர்.கே. பன்சால் தெரிவித்தார்.

சிறுமியின் மர்ம உறுப்புகள் பலத்த சேதமடைந்துள்ளதால் அதை அறுவை சிகிச்சை மூலமே சரி செய்ய முடியும்.

சிறுமியின் குடலில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். மேலும் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

English summary
The five-year-old Delhi girl who was brutally raped is in "stable" condition after undergoing surgery, doctors said. They are planning to perform one more surgery on her.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X