For Daily Alerts
Just In
பாஸ்டன் குண்டுவெடிப்பு: அண்ணன் சாவில் திடீர் திருப்பம்- காரை ஏற்றிக் கொன்ற தம்பி!

செசன்யா அருகே உள்ள ரஷ்ய பகுதியைச் சேர்ந்த தமேர்லான் சர்னயேவ் (26), ஷோக்கர் (19) இருவரும் குண்டு வைத்த விவகாரத்தில் தேடப்பட்டு வந்தனர்.
அப்போது பாஸ்டனின் வாட்டர்டவுன் பகுதியில் இரண்டு கார்களைக் கடத்தி அதில் தப்பிச் சென்ற இருவரையும் போலீசார் சுற்றி வளைத்தனர். இதையடுத்து காரில் இருந்து வெளியே குதித்த தமேர்லான் போலீசாரை நோக்கி சுடவே பதிலுக்கு போலீசார் சுட்டனர்.
இதில் படுகாயமடைந்த தமேர்லானுக்கு கைவிலங்கு மாட்ட போலீசார் நெருங்கியபோது இன்னொரு காரில் இருந்த ஷோக்கர் அதை மிக வேகமாக இயக்கி தனது அண்ணனையே காரை ஏற்றிக் கொன்றுவிட்டுத் தப்பினான்.
இதைத் தொடர்ந்து 48 மணி தேடுதல் வேட்டைக்குப் பின் வாட்டர்டவுன் பகுதியில் ஒரு படகில் பதுங்கியிருந்த ஷோக்கரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.