For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஸ்டனில் குண்டு வைத்த நபரைப் போலவே இருந்ததால் 'டார்ச்சருக்கு' உள்ளான இந்திய மாணவர்!

By Chakra
Google Oneindia Tamil News

Boston bombing suspect Dzhokhar probably killed his elder brother: Police
பாஸ்டன்: பாஸ்டன் நகரில் வெடிகுண்டு வைத்த செசன்யாவைச் சேர்ந்த இரு சகோதரர்களில் ஒருவரான ஷோக்கரைப் போலவே இருந்ததால் இந்தியரான சுனில் திரிபாதி என்ற வாலிபரை சில அமெரிக்க டிவி சேனல்கள் குற்றவாளியாகக் காட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரின் பிரின் மார் பகுதியில் வசிப்பவர் ஜூடி திரிபாதி. இவரது மகன் சுனில் திரிபாதி (22).

பாஸ்டனில் வெடிகுண்டு வைத்ததாக தாமர்லேன், ஷோக்கர் ஆகிய இரு சகோதரர்களின் படங்களையும் எப்பிஐ வெளியிட்டு தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருந்தபோது, திரிபாதியின் வீட்டு வாசலுக்கு சில அமெரிக்க டிவி சேனல்களின் வேன்கள் படையெடுத்தன.

மேலும் வீட்டில் இருந்தவர்களுக்கும் நிருபர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான போன் கால்கள் வந்தன.

பாஸ்டன் குண்டுவெடிப்பு குற்றவாளியான உங்கள் மகன் குறித்து என்ன நினைக்கிறீர்கள், அந்தப் பையன் எங்கே என்று கேள்விகளால் துளைத்து எடுத்தனர்.

பிரவுன் பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் படிக்கும் சுனில் திரிபாதி அப்போது தான் வீட்டுக்கு வந்துவிட்டு கல்லூரி விடுதிக்குத் திரும்பிய நிலையில், அவரது வீட்டினரை நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர்.

அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் டிவி சேனல்களில் காட்டப்படும் தாமர்லேன், ஷோக்கருக்கும் சுனிலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், பார்ப்பதற்கு ஷோக்கர் போலவே இருப்பதால் நீங்கள் சுனிலை தவறாக தீவிரவாதியாக சித்தரிக்க முயல்கிறீர்கள் என்றும் பதில் சொல்லிச் சொல்லி அலுத்துப் போயினர்.

பின்னர் போலீசார் வந்து, சுனிலுக்கும் பாஸ்டன் தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று விளக்கிய பிறகே டிவி சேனல் வேன்கள் அங்கிருந்த நகர்ந்தன.

English summary
While law enforcement agencies hunted for the suspects in the Boston Marathon bombing, there was a another round-the-clock search, in Providence: for a philosophy student who left his apartment near Brown University on March 16 and has yet to return. On Thursday night, internet users and some news organizations thought they saw a link between the search for the bombing suspects — Tamerlan and Dzhokhar Tsarnaev — and the student, Sunil Tripathi, 22, because some thought Tripathi looked like the photo of one of the suspects. The rumor caught fire, and news media vans staked out the home of Tripathi's parents, in Bryn Mawr, Pa. His sister Sangeeta received 58 calls from reporters between 3am and 4.11am on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X