For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகின் முதல் பணக்காரர் வால்மார்ட் குடும்பம்-லட்சுமி மிட்டல் 4வது இடம்: 20வது இடத்தில் அம்பானி

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தின் சண்டே டைம்ஸ் பத்திரிக்கையில் பணக்காரர்கள் பட்டியலில் எட்டாண்டுகளாக முதல் இடத்தில் இருந்த இந்தியரான லட்சுமி மிட்டல், இந்த ஆண்டு 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

லட்சுமி மிட்டல்...

லட்சுமி மிட்டல்...

உலகிலேயே பெரிய பணக்காரர்கள் பட்டியலை இங்கிலாந்தின் ‘சண்டே டைம்ஸ்' வருடந்தோறும் தொகுத்து வழங்கி வருகிறது. இதில் கடந்த எட்டு ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த லட்சுமி மிட்டல் இந்தாண்டு 4 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

வால்மார்ட்...

வால்மார்ட்...

உலகப் பிரசித்தி பெற்ற சில்லறை வர்த்தக ஜாம்பவான்களும், வால்மார்ட் நிறுவனங்களின் அதிபர்களுமான வால்டன் குடும்பத்தினர்தான் உலகின் முதல் நிலை பணக்காரர்கள் ஆவார்கள். இவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அதிகம் இல்லை. 9 ஆயிரம் பில்லியன் பவுண்டுகள். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.7 லட்சத்து 47 ஆயிரம் கோடிதான்.

அம்பானிகள்...

அம்பானிகள்...

இந்த பட்டியலில் பிரபல இந்திய தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி ஆகியோர் கூட்டாக உலகின் 20வது பெரிய பணக்காரர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த அம்பானி சகோதரர்களின் மொத்த சொத்து மதிப்பு 17 பில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ. 1 லட்சத்து 41 ஆயிரத்து 100 கோடி) ஆகும்.

இந்துஜாக்கள்...

இந்துஜாக்கள்...

உலகின் 47வது பெரிய பணக்காரர்கள் என்ற பெயரை இந்துஜா சகோதரர்கள் தட்டிச் சென்றுள்ளனர். அந்த வகையில் ஸ்ரீசந்த், கோபிசந்த் இந்துஜா சகோதரர்கள் சொத்து மதிப்பு 11 பில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ. 91 ஆயிரத்து 300 கோடி) ஆகும்.

English summary
LONDON: Indian-origin steel tycoon Lakshmi Mittal, who spent eight years at the top of the Sunday Times Rich List, has dropped down to fourth position this year while leading NRI industrialist Lord Swraj Paul has emerged as the wealthiest Peer in the House of Lords..
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X