For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடற்போர் யுக்திகளை மாற்றியமைக்கும் லேசர் அட்டாக் -அமெரிக்காவின் அடுத்த ஆயுதம் ரெடி!

Google Oneindia Tamil News

வாஷிங்டன் : போர்க் கப்பல்களில், லேசர் ஆயுதங்களை நிறுவி, அவற்றின் மூலம் எதிரி எவுகணைகள், போர் விமானங்கள் மற்றும் உளவு விமானங்களை தாக்கி அழிக்கும் தொழில்நுட்பத்தை அமெரிக்கா அண்மையில் பரிசோதித்து பார்த்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா - தென் கொரியா இடையிலான மோதல் போக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், கொரிய தீப கற்பத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா புதிய ஒரு ஆயுதத்தை பரிசோதித்து பார்த்துள்ளது. லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆயுதம், இதுவரை பயன்பாட்டில் இல்லாத ஒரு ஆயுதமாக இருக்கும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த ஆளில்லா உளவு விமானம், இதுபோன்ற விமானங்களை தாக்குவதற்கு சிறிய ரக ஏவுகணை அல்லது ராக்கெட் குண்டுகள் போன்றவை தான் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், லேசர் தொழில் நுட்பம் மூலம் இவற்றை அழிக்கும் யுக்தியை அமெரிக்கா உருவாக்கியுள்ளது.

லேசர்ல சுட்டு...

லேசர்ல சுட்டு...

கப்பலில் உள்ள லேசர் ஆயுதம், குறிப்பிட்ட உளவு விமானத்தை குறிவைத்து தொடர்ந்து லேசர் கதிரை வீசச் செய்கிறது. தொடர்ந்து ஒரே இடத்தில் வெப்பம் அதிகரிப்பதால், அந்த இடத்தில் தீப்பிடிக்கிறது. இதனால் கட்டுப்பாட்டை இழக்கும் உளவு விமானம் கடலில் விழுகிறது.

கடற்போர் யுக்தி...

கடற்போர் யுக்தி...

அமெரிக்காவின் இந்த ஆயுதக் கண்டுபிடிப்பு, கடற்போர் யுக்திகளை மாற்றியமைக்கும் என அந்நாட்டு கடற்படை உயரதிகாரியான அட்மிரல் க்ளுண்டர் தெரிவித்துள்ளார்.

செலவும் குறைவு...

செலவும் குறைவு...

பல கோடி ரூபாய் செலவிட்டு ஏவுகணை தயாரித்து போர் விமானம் அல்லது உளவு விமானத்தை சுட்டு வீழ்த்துவதை விட, சில டாலர்கள் செலவில் லேசர் கதிர்களை செலுத்தி விமானத்தை வீழ்த்துவது, பொருளாதார ரீதியாகவும், போர் யுக்தி அடிப்படையிலும் சிறந்ததாம்.

அதுக்கும் கரண்ட் வேணுமாம்...

அதுக்கும் கரண்ட் வேணுமாம்...

மின்சாரம் மூலம் இயங்கும் இந்த லேசர் ஆயுதம், மின்சாரம் தீரும் வரை தொடர்ந்து லேசர் கதிர்களை வெளிப்படுத்தக் கூடியது. ஏவுகணைகளை சுமந்து செல்வதை விட, இவற்றை கப்பலில் வைத்துக் கொள்வது மிகப் பாதுகாப்பானது.

பனில பணி செய்யாதாம்...

பனில பணி செய்யாதாம்...

பனிப் பொழிவு அதிகம் உள்ள காலகட்டம், மேகமூட்டம் உள்ள இடங்கள் மற்றும் மழைப் பொழிவின் போது இந்த லேசர் ஆயுதத்தை பயன்படுத்த முடியாது என்பது இந்தக் கருவிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

2014ல பயன்பாடு...

2014ல பயன்பாடு...

தற்போது பரிசோதனை முறையில் சோதிக்கப்பட்ட இந்த லேசர் ஆயுதம், 2014-ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறப்படுகிறது.

பவரைக் கூட்டணுமாம்...

பவரைக் கூட்டணுமாம்...

சுமார் 30 மில்லியன் டாலர் பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த லேசர் ஆயுதத்தின் சக்தி, தற்போது குறைவாக இருப்பதாகவும், இதனை அதிகரிக்க வேண்டும் என்றும் அமெரிக்க கடற்படை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

English summary
The US Navy said it is preparing to roll out a sea-based laser weapon capable of disabling small enemy vessels and shooting down surveillance drones.The laser system will be deployed in 2014, two years ahead of schedule, aboard the USS Ponce, an amphibious transport ship retrofitted as a waterborne staging base, the Navy said Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X