For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பட்டையைக் கிளப்பிய 'ராயல் சேலஞ்சர்ஸ்' புயல் கெய்ல்! 66 பந்துகளில் 175 ரன்கள்-நாட் அவுட்!!

By Mathi

பெங்களூர்: நடப்பு ஐபிஎல் 6வது தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் புயல் என வர்ணிக்கப்படும் கிறிஸ் கெய்ல் தாம் பெரும் புயல்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் அதகளமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 66 பந்துகளில்175 ரன்களைக் குவித்து அவுட் ஆகாமல் இருந்தார்.

ஐபிஎல் தொடரில் பெங்களூரில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் புனே வாரியர்ஸ் அணியும் இன்று மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கிறிஸ் கெயில், தில்ஷன் ஜோடி அதிரடியாக ரன்களைக் குவித்தது. அதுவும் கிறிஸ் கெய்ல் இருக்கிறாரே..அப்பப்பா... புனே வாரியர்ஸின் பந்துகளை அடித்து நொறுக்கிவிட்டார்...அத்தனையும் பவுண்டரிகளாக..சிக்சர்களாக பறந்தன.

30 பந்தில் சதமடித்த கெய்ல்

30 பந்துகளிலேயே அவர் சதத்தைக் கடந்து சாதனை படைத்தார். நடப்பு தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வாட்சன் நேற்று முதல் சதமடித்திருந்தார். இன்று கெய்ல் புதிய சாதனையாக 30 பந்துகளில் சதமடித்திருக்கிறார். இதில் 11 சிக்சர்களும் 8 பவுண்டரிகளும் அடங்கும்.

Gayle

சதமடித்த கையோடு சிக்சர்களையும் பந்துகளையும் விடாமல் அடித்துக் கொண்டே இருந்தார். சில சிக்சர்கள் மைதானத்தை தாண்டி எங்கோ போய் விழுந்தன. அந்தளவுக்கு மிக உயரமான சிக்சர்கள் அவை!

20வது ஓவர் முடியும் வரை கெய்ல் அவுட் ஆகவே இல்லை! 66 பந்துகளை எதிர்கொண்ட அவர் 175 ரன்களை எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.

17 சிக்சர்கள் சாதனை

சரி மொத்தமாக இன்று மட்டும் எத்தனை சிக்சர் அடித்தார் கெய்ல்?

17 சிக்சர்கள்.....13 பவுண்டரிகள்....

ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஆட்டத்தில் 17 சிக்சர்களை விளாசிய சாதனையையும் கெய்ல் படைத்திருக்கிறார்.

8 பந்தில் 31 ரன் எடுத்த டிவில்லியர்ஸ்

இவரைப் போல இன்னொருவர் இருக்கிறார் டிவில்லியர்ஸ்

கெய்லைப் போல மற்றொரு ரன் மிஷின் டிவில்லியர்ஸ்! 8 பந்துதான் சந்தித்தார். 31 ரன்களைக் குவித்தார். அப்புறம் 8 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சர்னு வெளுத்து வாங்கினா ரன் சேராமல் என்ன செய்யுமாம்?

ஒருவேளை டிவில்லியர்ஸ் நிலைத்திருந்தால் கெயிலின் சாதனையை முறியடித்திருக்க வாய்ப்பிருக்கிறது!

அதிக ரன்குவித்து மற்றொரு சாதனை

இதேபோல் இன்னொரு சாதனையும் இன்று அரங்கேறியிருக்கிறது. 2010ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடித்த 246 ரன்கள்தான் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இது இன்று முறியடிக்கப்பட்டிருக்கிறது.

புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 263 ரன்களை எட்டி புதிய சாதனை படைத்தது.

Story first published: Tuesday, April 23, 2013, 18:40 [IST]
Other articles published on Apr 23, 2013
English summary
The West Indies big-hitter, opening the batting for Bangalore Royal Challengers in their Indian Premier League match with Pune Warriors, reached three figures in just 30 balls, smashing 11 sixes and eight fours in the process.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X