For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெனாசிர் கொலை வழக்கு: பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் முஷாரப் ஆஜர்!

By Mathi
Google Oneindia Tamil News

Musharraf to be made part of Benazir murder probe, orders cour
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் அந்நாட்டு முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரையும் விசாரணையின் ஒருபகுதியாக சேர்த்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ள முஷாரப் சிறப்பு வாகனம் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு எதிராக வழக்கறிஞர்களும் ஆதரவாக தொண்டர்களும் கோஷம் எழுப்பினர். இதனால் நீதிமன்ற வளாகம் களேபரமாக காட்சியளித்தது. இருதரப்பினரும் கற்களை வீசிக் கொண்டதால் பதற்றமான சூழல் நிலவியது.

நீதிமன்றத்தில் தம்மை தலைமறைவுக் குற்றவாளி என அறிவித்ததை எதிர்த்தும் முடக்கப்பட்ட சொத்துக்களை ஒப்படைக்கக் கோரியும் முஷாரப் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீது பதிலளிக்குமாறு அந்நாட்டின் மத்திய புலனாய்வு அமைப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கின் விசாரணையில் முஷாரப்பையும் ஒருபகுதியாக சேர்த்துக் கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மே 3-ந் தேதியன்று நடைபெற உள்ளது.

English summary
An anti-terrorist court in Rawalpindi has ordered former president Gen (retd) Pervez Musharraf to be made part of the investigations into former premier Benazir Bhutto’s assassination
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X