For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காரில் மூட்டை, மூட்டையாக... ‘ராஜ நாகங்கள்’ கடத்தல்

Google Oneindia Tamil News

Vietnam police seize 53 king cobras from car
வியட்நாம்: காரில் மூட்டை, மூட்டையாக கட்டப்பட்டு இருந்த ‘ராஜ நாகங்களை' போலீசார் மீட்டு காட்டில் விட்டனர்.

வியட்நாம் காடுகளில் ‘ராஜ நாகம்' என்று அழைக்கப்படும் கொடிய விஷம் கொண்ட பாம்புகள் உலகிலேயே அதிக அளவில் காணப்படுகின்றன. இவை சுமார் 18 அடி நீளம் கூட இருக்கும். இந்த பாம்புகளை வேட்டையாட அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மருந்து தயாரிப்பதற்காக இதனை ரகசியமாக பிடித்து கடத்துகிறார்கள்.

இந்த நாட்டின் தலைநகர் ஹானாய் நகரில் சென்ற ஒரு காரை போலீசார் நிறுத்தி சோதனை நடத்திய போது அதில் ஏராளமான சாக்கு மூட்டைகள் இருந்தன. அவற்றில் 53 ராஜ நாகம் பாம்புகள் இருந்தன. ஒவ்வொன்றும் சுமார் 5.5 அடி நீளமுள்ளவை.

உடனே கார் டிரைவரை கைது செய்து ராஜ நாகங்களை போலீசார் கைப்பற்றி வனவிலங்கு காப்பகத்துக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். பிறகு அவற்றை காட்டில் கொண்டு போய் விடுவித்தனர்.

English summary
Vietnamese police say they have seized 53 king cobras from a car in Hanoi and arrested the driver.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X