For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூர் குண்டுவெடிப்பு எதிரொலி: சென்னையில் மேலும் 32 'அனாதை' கார்- பைக்குகள் பறிமுதல்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் கேட்பாரற்று நின்ற மேலும் 32 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த பின்னர் சென்னையில் தொடர்ச்சியாக வாகன சோதனை மற்றும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பொது இடங்களில் கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு போலீஸார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். இச் சோதனையில் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்ததாக 29 கார் டிரைவர்கள், மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த 83 பேர், 7 ஆட்டோ டிரைவர்கள் உள்பட 124 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது.

இதேபோல பொது இடங்களில் கேட்பாரற்று நின்ற 13 கார், 15 மோட்டார் சைக்கிள்கள், 4 ஆட்டோக்கள் என மொத்தம் 32 வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இவற்றை ஆவணங்கள் மூலம் விசாரணை செய்து அவர்களின் உரிமையாளர்களிடம் 15 வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டன. மீதியுள்ள 17 வாகனங்கள் அந்தந்த பகுதி குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

English summary
A team of Police yesterday night seized 32 vehicles which had no legal papers and owners at town protect hard point in Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X