For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வன்னியர் மற்றும் இதர சாதியைச் சேர்ந்த மொத்தம் 142 பேர் கைது:

By Chakra
Google Oneindia Tamil News

இச்சம்பவங்கள் தொடர்பாக, வன்னியர் உட்பட இதர இனத்தைச் சேர்ந்தவர்கள் மீது கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் 7 வழக்குகளும், ஆதிதிராவிடர்கள் மீது 4 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்குகளில் வன்னியர் மற்றும் இதர சாதியைச் சேர்ந்த மொத்தம் 142 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்குகள் அனைத்தும் குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டு, அத்துறையினர் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு மேலும் 37 எதிரிகளை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.

இவ்வழக்குகளில் 179 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை 149 பேர் நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 42 கிராமத்தினைச் சேர்ந்த வன்னியர் மற்றும் இதர இனத்தவர்கள் அம்மாவட்டத்தில் அமலிலுள்ள தடை உத்தரவை நீக்கக்கோரி, தங்கள் வீடுகளிலும் பொது இடங்களிலும் 13.01.2013 மற்றும் 14.01.2013 ஆகிய தினங்களில் கருப்புக் கொடிகளை ஏற்றினர்.

இச்சம்பவத்தையடுத்து, அம்மாவட்டத்திலுள்ள 5 தாலுக்காக்களைச் சேர்ந்த 88 கிராமங்களில் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 144(1) ன் கீழ் மாவட்ட ஆட்சியர் 13.12.2012 முதல் தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தார். பின்னர், மாவட்ட நிர்வாகம் 25.01.2013 அன்று, 80 கிராமங்களில் மேற்படி தடை உத்தரவு விலக்கிக்கொண்டதையடுத்து, 8 கிராமங்களில் மட்டும் தற்போது தடை உத்தரவு அமலில் உள்ளது.

மங்கை என்ற மங்கம்மாள் உயிரிழப்பு:

இதற்கிடையில், நத்தம் காலனியைச் சேர்ந்த மங்கை என்ற மங்கம்மாள் என்பவர், 29.11.2012 அன்று உடல்நிலை சரியில்லாமல் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், 03.12.2012 அன்று உயிரிழந்தார். அவரது தந்தை அன்பு, தனது மகள், நத்தம் காலனி சம்பவத்தால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு இறந்தவிட்டதாக புகார் தெரிவித்தார்.

இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு ஆதிதிராவிட அமைப்புகள் இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரியும், உரிய நிவாரணம் வழங்கக்கோரியும் போராட்டங்கள் நடத்தினர். பின்னர் மாவட்ட ஆட்சி யர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆதிதிராவிட அமைப்பு தலைவர்களோடு 7.12.2012 அன்று, நடத்திய பேச்சுவார்த்தையடுத்து, அவர்கள் 8.12.2012 அன்று இறந்து போன மங்கையின் உடலை மருத்துவமனையிலிருந்து பெற்றுக் கொண்டனர்.

English summary
CM Jayalalithaa today listed slew of steps taken after Dharmapuri caste clashes, in assembly today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X