For Daily Alerts
Just In
அமெரிக்கர்கள் பிறவியிலேயே புத்திசாலிகள் : ஒபாமா பெருமிதம்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஆண்டு தோறும் அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கண்காட்சியில், அமெரிக்காவின் பல மாகாணங்களில் இருந்து வந்துள்ள மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை பார்வைக்கு வைத்துள்ளனர்.
இந்த மாணவர்களிடையே உரையாற்றிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியதாவது:-
பொறியியல், அறிவியல் கண்டுபிடிப்புகள், புதிய கண்டறிதல்கள் ஆகியவற்றை மேற்கொள்வதில் அமெரிக்கா அதிக முனைப்பு காட்டியுள்ளது. அதுதான் நாம். அது நமது டி.என்.ஏ.வில் கலந்துள்ளது. இது போன்ற கண்டுபிடிப்புகளால் தான் நமது நாடு உலகில் பொருளாதார பலம் மிக்கதாக வளர்ந்துள்ளது.
நமது அறிவியல், மருத்துவம் மற்றும் தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் உலக மக்களுக்கு நாம் அதிக பங்களிப்பை வழங்கியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.