For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆப்பிளின் மவுசு குறைகிறதா?: 10 ஆண்டுகளில் முதன்முறையாக ஆப்பிள் நிறுவன லாபம் சரிந்தது

Google Oneindia Tamil News

கலிபோர்னியா: கடந்த பத்தாண்டுகளில் முதன்முறையாக, இந்த நிதியாண்டில்தான் ஆப்பிள் நிறுவனம் லாபத்தில் சரிவைச் சந்திக்கின்றது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஆப்பிள் நிறுவனத்தின், இந்த ஆண்டுக்கான காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள், சமீபகாலமாகப் போட்டி நிறுவனங்களான சாம்சங் உள்ளிட்ட சிலவற்றினால் கடும் சவாலை எதிர்கொண்டுள்ளது.

லாப சரிவு :

லாப சரிவு :

ஆயினும், ஐபோன் மற்றும் ஐபாட் விற்பனை மூலம் இந்த ஆண்டு 43.6 பில்லியன் டாலர்கள் கிட்டியது, இந்நிறுவனத்தின் லாப சரிவைக் குறைத்துள்ளது. எனவே, பங்குதாரர்களுக்கான ஈவுத்தொகை அதிகரிக்கப்படும் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.

சென்ற வருடத்தை விட குறைவு:

சென்ற வருடத்தை விட குறைவு:

குறிப்பிடத்தக்க விற்பனை மற்றும் கணக்கீடுகளை எட்டியபோதிலும், விற்பனை சந்தை அளவு குறைந்துள்ளதாகவும், கடந்த 2012ஆம் ஆண்டு தாங்கள் அடைந்த உயர்ந்த நிலையை தற்போது எட்டவில்லை என்றும், இந்நிறுவனத்தின் தலைமை இயக்குனர் டிம் குக் தெரிவித்தார்.

கோடிகளில் விற்பனை :

கோடிகளில் விற்பனை :

கடந்த மூன்று மாதங்களில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் 37.4 கோடியும், ஐபாட் 19.5 கோடியும் விற்பனை ஆகியுள்ளன.

முண்ணனி தான்... ஆனா புதுமாடல் இல்லையே

முண்ணனி தான்... ஆனா புதுமாடல் இல்லையே

டேப்லெட் கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட்போன் விற்பனையில் இந்நிறுவனம் தொடர்ந்து முன்னணியில் இருந்தாலும், சாம்சங் போன்ற போட்டி நிறுவனங்களின் இலவசங்கள் ஆப்பிளின் சந்தை மதிப்பைப் பெருமளவு குறைக்கின்றது என்பது வாடிக்கையாளர்களின் கருத்தாக உள்ளது. அதுபோல் புதிய வெளியீடுகளும் இந்நிறுவனத்தில் குறைவாகவே உள்ளது என்று அவர்கள் கருதுகின்றனர்.

English summary
The move to renew investors' love affair with Apple's stock came as the company announced its first profit decline in a decade.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X