For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடகா காங். தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவை புறக்கணித்தார் எஸ்.எம். கிருஷ்ணா!

By Mathi
Google Oneindia Tamil News

பெங்களூர்; கர்நாடகா மாநிலத்தில் ஆட்சியை எப்படியும் பிடித்துவிடுவோம் என்று நம்பிக்கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மூத்த காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். கிருஷ்ணா, தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவை புறக்கணித்திருக்கிறார்.

அதிருப்தியில் எஸ்.எம். கிருஷ்ணா

கர்நாடகா சட்டசபைக்கு மே மாதம் 5-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா கட்சியின் எந்த கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் தொடர்ச்சியாக புறக்கணித்து வந்தார், ஸ்ரீரங்கபட்டணா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ்.எம்.கிருஷ்ணாவின் ஆதரவாளர் என்று கூறப்படும் ரவீந்திர ஸ்ரீகண்டய்யாவை மாற்றிவிட்டு தமது ஆதரவாளருக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று நடிகர் அம்பரீஷ் திடீரென்று போர்கொடி உயர்த்தினார். அவரது நெருக்கடிக்கு பணிந்து கட்சி மேலிடம் அவரை மாற்றிவிட்டு அம்பரீசின் ஆதரவாளர் லிங்கராஜுக்கு சீட் வழங்கியது. தனது ஆதரவாளர்களுக்கு டிக்கெட் மறுக்கப்பட்டதால் அவர் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்.

தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா புறக்கணிப்பு

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா பெங்களூரில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் உள்பட கர்நாடக காங்கிரஸ் கட்சியின் அனைத்து முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர். ஆனால் இந்த நிகழ்ச்சியை எஸ்.எம்.கிருஷ்ணா புறக்கணித்துவிட்டார்.இதன் மூலம் தமது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

சமாதானமானாரா?

இதைத் தொடர்ந்து எஸ்.எம்.கிருஷ்ணாவை பெங்களூர் சதாசிவநகரில் உள்ள அவரது வீட்டில் கட்சி மேலிட தலைவர்களான ஏ.கே.ஆண்டனி, அம்பிகா சோனி, மதுசூதன் மிஸ்திரி ஆகியோர் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆண்டனி, எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து சட்டசபை தேர்தல் குறித்து விவாதித்தோம். தேர்தல் பிரசாரம் குறித்து அவரிடம் ஆலோசனையை கேட்டு பெற்றோம். கட்சியின் வெற்றி வாய்ப்பு குறித்தும் நாங்கள் விவாதித்தோம் என்றார். ஆனாலும் எஸ்.எம். கிருஷ்ணா தரப்பு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ஒக்கலிகா வாக்குகுள்?

கர்நாடகத்தில் லிங்காயத்துகள் மற்றும் ஒக்கலிகா கவுடாக்களின் வாக்குகள் தான் மாநில அரசியலை தீர்மானிக்கக் கூடியதாக இருந்து வருகிறது. லிங்காயத்துகளின் வாக்குகளை பாஜகவுக்கு கொண்டு சேர்த்த எதியூரப்பா இப்போது தனிக் கட்சி தொடங்கிவிட்டார். மேலும் கவுடா சமூகத்தைச் சேர்ந்த சதானந்த கவுடாவையும் பாஜக முதல்வர் பதவியில் இருந்து மாற்றியது. இதனால் சிதறும் லிங்காயத்து சமூக வாக்குகள் மற்றும் ஒக்கலிகா கவுடா வாக்குகளை அறுவடைய செய்ய கவுடா சமூகத்த்தைச் சேர்ந்த எஸ்.எம். கிருஷ்ணாவை முன்னிலைப்படுத்த காங்கிரஸ் விரும்பியது. இதனால் அவர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்தும் விலகினார். ஆனாலும் தாம் நினைத்ததுபோல் காங்கிரஸ் மேலிடம் செயல்படவில்லை என்ற அதிருப்தியில் கிருஷ்ணா இருக்கிறார். இதனால் ஒக்கலிகா கவுடா சமூகத்தின் வாக்குகள் என்னவாகும் என்ற கேள்வி கர்நாடகா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

English summary
Senior Congress leader S M Krishna, largely seen to have been ignored in the candidates selection process for the May five Assembly elections in Karnataka, skipped the manifesto-release event of the party on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X