For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'அரசியல் தீண்டாமை' சமுதாயத்திற்கு பேராபத்து: நரேந்திர மோடி

Google Oneindia Tamil News

Untouchability continuing in politics, says Narendra Modi
திருவனந்தபுரம்: அரசியல் தீண்டாமை பெருகி வருவதாகவும், அதனால் சமூகத்திற்கு ஆபத்து பெருகுகிறது எனவும் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சிவகிரி ஸ்ரீ நாராயண மடத்தின் வெள்ளி விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவருக்கு பாரதீய ஜனதாவின் அமோக வரவேற்பும், இடதுசாரிகளின் எதிர்ப்பு போராட்டமும் நடந்தது.

அங்கு பேசிய மோடி, 'முற்காலத்தில் சமூதாயத்தில் ஏற்பட இருந்த பெரிய அளவிலான தீமைகளை மதகுருமார்களும், சமுதாய சீர்திருத்தவாதிகளும் கலைந்தனர். ஆனால், இன்று அரசியல் தீண்டாமை சமுதாயத்தில் பெருகிக்கொண்டிருக்கிறது' என்று கூறினார்.

எந்த ஒரு அரசியல் கட்சியையோ அல்லது அரசியல்வாதியையோ அவர் குறிப்பிட்டு கூறவில்லை. ஆனால், பொதுப்படையாக இக்கருத்தை வெளியிட்டார். மேலும், இந்திய ஜனத்தொகையில் 60% அதிகமானோர் 35 வயதுக்குட்பட்டவர்களே, எனவே நாட்டின் வளர்ச்சி அவர்களை நம்பியே உள்ளது என தெரிவித்தார்.

English summary
Gujarat Chief Minister Narendra Modi regretted 'untouchability' was increasing in politics, apparently alluding to the protest by CPI(M) and resentment by Congress over his visit to Sree Narayana Mutt at nearby Sivagiri,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X