For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கரூர் ஆழ்துளை கிணற்றில் சிக்கி 16 மணிநேரத்துக்குப் பின் மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

By Mathi
Google Oneindia Tamil News

கரூர் :கரூர் அருகே 600 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கி 16 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்தாள்

கரூர் மாவட்டம் பாதிரிப்பட்டியை அடுத்த இளங்கனூரைச் சேர்ந்த முத்துப்பாண்டியன் தனது 7 வயது மகள் முத்துலட்சுமியை முருங்கைக்காய் பறிக்க தோட்டத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த சிறுமி 600 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார். இதை எட்டிப்பார்த்த முத்துப்பாண்டியன் தமது மகள் 12 அடி ஆழத்தில் சிக்கியபடி தவிப்பதை பார்த்து அலறினார். 12 அடிக்கு கீழே உள்ள பகுதியில் சிறுமியின் உடல் செல்லாத அளவுக்கு குறுகலாக இருந்தது.இதைத் தொடர்ந்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார் அவர்.

7 year old girl fell into borewell, near Karur

பாறைகளால் மீட்பில் தாமதம்

அங்கு 3 பொக்லைன் இயந்திரங்களை வரவழைத்து குறுக்குவெட்டு பகுதியில் குழி தோண்டி சிறுமியை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். சிறுமி விழுந்த ஆழ்துளை குழியின் அருகில் அதிவேக சக்தி கொண்ட இரண்டு பொக்லைன் எந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. இரண்டு அடி பள்ளம் தோண்டுவதற்குள் பாறை இருந்ததால் தோண்ட முடியவில்லை. இதைத் தொடர்ந்து, துளையிடும் மிஷின் மூலம் பள்ளம் எடுக்கப்பட்டது. சிறுமியின் சுவாசத்துக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வந்தது முதலில் தந்தையுடன் பேசிக் கொண்டிருந்த சிறுமி பிற்பகலில் மயக்கம் அடைந்து விட்டதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறுவனின் நவீன கருவி

ஒரு கட்டத்தில் 9 மணி நேரம் ஆகியும் சிறுமி மீட்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து மதுரையில் இருந்து ஒரு அதிநவீன கருவி கொண்டுவரப்பட்டது. போர்வெல் குழியில் சிக்கிய குழந்ததகளை மீட்பதற்காகவே பிரத்யேகமாகவே ஒரு சிறுவன் இந்த நவீன கருவியை வடிவமைத்திருக்கிறான். மாலை 5 மணியளவில் இந்த கருவி மீட்புப் பணிக்கு பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருவியில் கை போன்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. அத்துடன் ஒரு நவீன கேமராவும் பொருத்தப்பட்டிருந்தது. இக்கருவியை போர்வெல் குழாயினுள் செலுத்தி சிறுமியை அப்படியே மேலே தூக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பல முறை இந்த கருவி உள்ளே செலுத்தியும் குழந்தையை லேசாகத்தான் தூக்க முடிந்தது. ஆனால் குறிப்பிட்ட அளவுக்கு மேலே அக்கருவியால் தூக்க இயலவில்லை.

மீண்டும் பள்ளம் தோண்டி மீட்பு

இதனால் அருகிலேயே மீண்டும் பாறையை உடைத்து பள்ளம் வெட்டும் முயற்சியும் தொடங்கப்பட்டது. இம்முயற்சியின் பயனாக இரவு 10.30 மணியளவில் அதாவது சுமார் 16 மணி நேர போராட்டத்துக்குப் பின்பு குழியில் விழுந்த சிறுமி முத்துலட்சுமி மயங்கிய நிலையில் மீட்கப்பட்டாள். மீட்கப்பட்ட உடன் அந்த சிறுமி சிகிச்சைகாக ஆம்புலன்சில் ஏற்ற்பட்டு கரூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். அந்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவர்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து சிகிச்சை அளித்துப் பார்த்தனர். செயற்கை சுவாசங்கள் பொருத்தியும் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் சிறுமி முத்துலட்சுமி இறந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A Seven-year-old girl, fell into a borewell while going to garden with her father near Karur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X