For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மது குடிக்கும் போட்டியில் வைரத்தை விழுங்கிய 80 வயது அமெரிக்க பெரிசு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்:மதுகுடிக்கும் போட்டியில் தவறுதலாக பரிசுக்குரிய வைரத்தையும் சேர்த்து விழுங்கி பார்வையாளைகளை படபடக்க வைத்தார் 80 வயது அமெரிக்க பாட்டி.

அமெரிக்காவில் வாஷிங்டனில் தம்பா பெண்கள் சங்கம் உள்ளது. இந்த சங்கத்துக்கு நிதி திரட்டுவதற்காக ஷாம்பெயின்(திராட்சை ரசம் மது) குடிக்கும் போட்டி நடந்தது. அதற்காக 400 கோப்பைகளில் திராட்சை மது ரசம் ஊற்றப்பட்டிருந்தது. அதில், ஒரு கோப்பையில் மட்டும் தனியார் நிறுவனம் அன்பளிப்பாக அளித்த ரூ.3 லட்சம் மதிப்பிலான வைரத்தை போட்டு இருந்தனர். அந்த மது கோப்பை யாருக்கு கிடைக்கிறதோ அவருக்கே அதில் போடப்பட்டிருக்கும் வைரம் சொந்தம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

வைரத்தை வெல்ல போட்டி கடுமையாக இருந்தது. இந்நிலையில் வைரம் போட்டிருந்த கோப்பை மிரியம் என்ற 80 வயது பெண்ணின் கைக்கு கிடைத்தது. அந்த கோப்பையில் ஊற்றப்பட்டிருந்த மதுவை குடித்த மிரியம் அப்படியே வைரத்தையும் சேர்த்து தவறுதலாக விழுங்கிவிட்டார். இதனால் அங்கு மது குடி போட்டியில் பங்கேற்றிருந்தவர்கள் பதற்றமடைந்தனர்.

பின்னர் டாக்டரிடம் விரைந்து சென்று தமது வயிற்றுக்குள் வைரம் இருப்பதை உறுதி செய்து ஒருவழியே வெளியே எடுத்து உயிர் தப்பியிருக்கிறார் மிரியம்!

விளையாட்டு வினையாகிறது இதுதான்!

English summary
An 80-year-old Florida woman accidentally swallowed a $5,000 diamond that had been placed in her glass of champagne at an charity event.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X