For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தசாவதாரத்தில் காட்சி தந்த கள்ளழகர்: அழகர் மலைக்கு புறப்பட்டார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: வைகை ஆற்றில் இறங்குவதற்காக மதுரைக்கு வந்த கள்ளழகர், ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவாதாரக் கோலத்தில் காட்சியளித்ததை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதுரையில் இன்று அதிகாலை பூப்பல்லாக்கில் அழகர் மலைக்கு புறப்பட்ட அழகரை மதுரை மக்கள் வழியனுப்பி வைத்தனர்.

தசாவதாரம், பூப்பல்லக்கில் காட்சியளித்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்த கள்ளழகர் இன்று காலை அழகர்கோயிலுக்கு புறப்படுகிறார்.சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் கடந்த 25ம் தேதி வைகை ஆற்றில் எழுந்தருளினார்.

அதனைத் தொடர்ந்து ஆற்றங்கரை வழியே வண்டியூர் சென்று வீரராகவப் பெருமாள் கோவிலில் தங்கினார். அங்கிருந்து புறப்பட்ட அழகர், கள்ளழகர் தேனூர் மண்டபத்திற்கு சென்று அங்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு மாலையில் சாபவிமோசனம் அளித்தார்.

Chithirai Festival: Kallazhagar Dasavatharam

அதன் பிறகு நாரைக்கு முக்தி அளித்து விட்டு அங்கிருந்து வெள்ளிக்கிழமை இரவு ராமராயர் மண்டபத்தை வந்தடைந்த அழகர், அங்கு விடிய, விடிய தசாவதார கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மட்சம், கூர்மம், வராகம், வாமனன், நரசிம்மம், உள்ளிட்ட பத்து வித அலங்காரங்களில் காட்சி கொடுத்த அழகரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

பின்னர் மோகினி அவதாரத்திலேயே மண்டகப்படிகளில் தங்கியபடி சனிக்கிழமை இரவு 11 மணியளவில் தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபம் வந்தார். அங்கு கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

திருமஞ்சனமான அழகர் இன்று அதிகாலை 2.30 மணியளவில் பூப்பல்லக்கில் கருப்பணசாமி கோயில் சன்னதி அருகே காட்சியளித்தார். பின்னர் அங்கிருந்து அழகர்கோவில் நோக்கி புறப்பட்ட கள்ளழகரை பக்தர்கள் சேவை செய்து வழியனுப்பினர்.

இன்று காலையில் புறப்படும் கள்ளழகர் பல்வேறு மண்டபங்களில் தங்கி இரவு 7 மணிக்கு சென்றடைகிறார். பின்னர் நாளை அதிகாலை 2 மணிக்கு அப்பன் திருப்பதி சென்றடைகிறார். கள்ளந்திரி வழியாக வழிநெடுகிலும் காட்சியளித்தபடி செல்லும் கள்ளழகர் நாளை காலை 10 மணிக்கு அழகர்கோயில் சென்றடைகிறார். ஏப்ரல் 30ம் தேதி உற்சவசாந்தியுடன் சித்திரை விழா நிறைவடைகிறது.

English summary
Kallazhagar delighted the devotees by displayed his Dasavatharam forms at the Rama Rayar Mandapam at Madurai on Friday night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X