For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மரக்காணம் ஜாதிக் கலவரம்: கடும் நடவடிக்கை கோரும் விஜயகாந்த்

By Chakra
Google Oneindia Tamil News

Vijaykanth
சென்னை: ஜாதிக் கலவரங்களை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் நானும், தேசிய முற்போக்கு திராவிட கழகமும் எந்த சூழ்நிலையிலும் ஆதரிக்க மாட்டோம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த இரண்டாண்டுகளாக வெவ்வேறு சமுதாயத்தினரிடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு, அது கலவரமாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை மிகவும் கவலைப்படக்கூடிய விஷயமாகும். இது போன்ற நிலைகள் தமிழ்நாட்டில் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் பாரதியார் ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று தமிழ் மக்களுக்காக பாடி வைத்தார். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், ஜாதி மோதல்களை அறவே ஒழிக்க வேண்டும் என்பதற்காக பதவியை துச்சமென நினைத்து சமுதாய பணியாற்றினார்.

இது போன்ற பல பெருந்தலைவர்கள் தமிழ்நாட்டில் ஜாதி ஒழிப்பை முன் நிறுத்தி தொண்டாற்றினார்கள். ஆனால் இன்று இரண்டு வெவ்வேறு ஜாதிகளை சார்ந்தவர்கள் அடித்துக் கொள்கிறார்கள். அதன் மூலம் கொலைச் சம்பவங்களும், கொள்ளை அடிக்கும் சம்பவங்களும், வீடுகளை தீயிட்டுக் கொளுத்துவதும், பொது சொத்துகளை நாசம் செய்வதும் போன்ற சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகின்றன.

தமிழ் மக்கள் ஜாதி, மதம், இனம், மொழி இவற்றிற்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் ஒரே இனம், ஒரே மொழி என்கின்ற அடிப்படையில் நாம் தமிழர் என்ற இன உணர்வோடு மட்டும் சகோதர, சகோதரிகளாக வாழ வேண்டும்.

அரசியல் என்பதும், கட்சிகள் என்பதும் மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் தான் இருக்கவேண்டும். மக்களையும், நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றுவதற்குத்தான் அரசியல் கட்சிகள் பாடுபட வேண்டுமே தவிர, இது போன்ற ஜாதி மோதல்களை உருவாக்கி, அதன் மூலம் மக்களை அழித்து அரசியல் லாபம் தேடும் நோக்கில் இருக்கக் கூடாது. இக்கருத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் உறுதியாக இருக்க வேண்டும்.

ஜாதிக் கலவரங்களை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் நானும், தேசிய முற்போக்கு திராவிட கழகமும் எந்த சூழ்நிலையிலும் ஆதரிக்க மாட்டோம். அத்தோடு இந்த மோதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். மரக்காணத்தில் ஏற்பட்ட கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுத்து, உரிய தண்டனையை தமிழக அரசு பெற்றுத் தரவேண்டும்.

இந்த கலவரத்திற்கு தூண்டு கோலாக யார் இருந்தாலும் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, இனியும் இது போன்ற மோதல்கள் தமிழ்நாட்டில் எங்கும் நிகழாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். இந்த கலவரத்தில் இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் தேமுதிக சார்பில் வழங்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

முன்னதாக மரக்காணம் வன்முறை தொடர்பாக அரசியல் கட்சிகள் தங்கள் மவுனத்தை கலைக்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் இன்று அவர் விஜய்காந்தை நேரில் சந்தித்தும் பேசினார். இதையடுத்தே விஜய்காந்திடம் இருந்து அறிக்கை வெளியானது.

English summary
DMDK president Vijaykanth has demanded severe action against those who instigated caste clashes at Marakkanam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X