For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று வெறும் கண்களாலேயே சனி கிரகத்தைப் பார்க்கலாம்..!

By Chakra
Google Oneindia Tamil News

Saturn closest, brightest; to be visible to the naked eye this Sunday
சென்னை: சனி கிரகம் இன்று சூரியனுக்கு நேர் எதிர் திசையில் வரவிருக்கிறது. மேலும் பூமிக்கும் சனி கிரகத்துக்கும் இடையிலான தூரமும் இந்த ஆண்டில் இன்று தான் மிகக் குறைவாகவும் இருக்கப் போகிறது.

இதனால் பூமியில் இருந்து வெறும் கண்களாலேயே இந்த கிரகத்தை இன்று பார்க்க முடியும்.

பூமிக்கு ஒரு பக்கத்தில் சூரியனும் நேர் எதிர் திசையில் சனி கிரகமும் இன்று வருகின்றன. இதனால் சூரியனின் ஒளி சந்திரனில் பிரதிபலித்து அதை மிகப் பிரகாசமானதாகக் காட்டும். இதனால் இதை வெறும் கண்களாலேயே பார்க்க முடியும்.

இன்று மாலை சூரியன் அஸ்தமித்த பின் ஒரு மணி நேரத்தில் கிழக்குப் பகுதியில் சனி கிரகத்தை பார்க்க முடியும்.

மற்ற விண்மீன்கள் போல் அல்லாமல் மிகப்பிரகாசமாக இது ஒளிரும்.

சனிக்கோளை சுற்றி வளையம் உள்ளது. இதை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. சனிக்கோளை பொதுமக்கள் பார்ப்பதற்கு சென்னை பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக அங்கு 4 நவீன தொலைநோக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தொலைநோக்கிகள் மூலம் இரவு 8 மணி முதல் 11 மணி வரை பொதுமக்கள் சனி கிரகத்தைக் காணலாம். தொடர்ந்து 10 நாட்களுக்கு இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

English summary
Planet Saturn, known as the " Lord of the Rings", will be visible at its brightest today in the sky, as it positions itself directly opposite the Sun. Saturn will be at its 'opposition' today at 13:58 IST, SPACE director CB Devgun said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X