For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெவ்வேறு தேசங்களில் மே தினம்... ஓர் அலசல்

Google Oneindia Tamil News

சென்னை: 8மணி நேர வேலை.8 மணி நேர மன மகிழ்வு...8 மணி நேர உறக்கம்.. இது தான் உழைப்பாளர் தினத்தின் தாரக மந்திரம்.

உழைப்பாளர் தினம், உலகம் முழுவதும் பறந்துபட்ட தொழிலாளர்களின் வலிகளுக்கு மருந்து போடும் நன்னாள். உழைக்கும் வர்க்கத்திற்கான உயரிய நாள்.

காலவரையற்ற உழைப்பு, மிருகத்தனமான,கொத்தடிமைத்தனமான இன்னல்களில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள தொழிலாளர் அமைப்புகள் மேற்கொண்ட தொடர் போராட்டங்கள்...பட்ட கஷ்டங்கள் கணக்கற்றவை.

உழைத்துக் களைத்த மனிதனுக்கு சிறப்பு தந்து அவன் உழைப்பிற்கு ஓர் அங்கீகாரம் வழங்கும் நாளான உழைப்பாளர் தினத்தை இப்படியாக ஒவ்வொரு தேசமும் வெவ்வேறு நாட்களில், வெவ்வேறு பெயர்களில் கொண்டாடுகின்றன.

ஐரோப்பாவில்...

ஐரோப்பாவில்...

மேதினக் கொண்டாட்டமானது, ஐரோப்பிய மக்கள் பல தெய்வங்களை வணங்கி வந்த காலத்தில் ஏற்பட்டது. முதன் முதலில் இளவேனிற் கால ஆரம்பத்தை விழாவாகக் கொண்டாடினார்கள். ஆதிகாலத்தில் நெருப்பின் தினமாக மே 1ஆம் தேதியைக் கொண்டாடினார்கள். ஏப்ரல் 30 சாயந்திரம் விழாவைத் துவக்குவர். விளையாட்டு, கேளிக்கைகள், விருந்துடன் கூடிய விழா பனிக்காலம் முடிந்து இளவேனிற்காலத்தை வரவேற்பதற்காகக் கொண்டாடப்பட்டது.

பாதி ஆண்டு

பாதி ஆண்டு

இந்த நாள் ஒரு வருடத்தை சம பாதியாகப் பிரிக்கிறது என்று கருதினர். அதாவது, மே 1முதல் அக்டோபர் முடிய 6 மாதம், நவம்பர் 1 முதல் ஏப்ரல் முடிய ஆறு மாதம் எனக் கணக்கிட்டனர். இந்த விழாவை கத்தொலிக்க சர்ச் சட்டத்தின் பாதுகாப்பிலிருந்து நீக்கியது ஆனாலும் மக்கள் 1700 வரை கொண்டாடிக்கொண்டுதான் இருந்தனர்.

ரோமானியர்கள்...

ரோமானியர்கள்...

ரோமானியர்கள் பிரிட்டிஷ் தீவுகளுக்கு குடியேறியபொழுது, மே தினத்தை விமரிசையாகக் கொண்டாடினர். இந்த விழா பூக்களின் தேவதையான ஃப்லோராவிற்கான வழிபாடாக கொண்டாடப்பட்டது. ஏப்ரல் 28 முதல் மே 2 முடிய நடக்கும்.

கனடா...

கனடா...

பெர்முடா, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தொழிலாளர் தினத்தை செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கள் கிழமையில் கொண்டாடுகின்றன.

இந்தியா...

இந்தியா...

இந்தியா மே 1, 1927 இல் இருந்து தொழிலாளர் வாரத்தைக் கடைபிடிக்கத் தொடங்கியது. இது பல்வேறு தொழிலாளர் அமைப்புகளால் கொண்டுவரப்பட்ட ஊர்வலங்களுடன்I பொது விடுமுறையாக கொண்டாடப்படுகின்றது.

மாநிலம் உருவான நாள்...

மாநிலம் உருவான நாள்...

மகாராஷ்டிரா மற்றும் குஜராத் (இந்தியாவிலுள்ள மாநிலங்கள்) ஆகியவற்றில், தொழிலாளர் வாரமானது 'மகாராஷ்டிரா திவ்யாஸ்' மற்றும் 'குஜராத் திவ்யாஸ்' (முறையே, மகாராஷ்டிரா தினம் மற்றும் குஜராத் தினம்) ஆகியவற்றுடனும் நிகழ்கின்றது, ஏனெனில் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் 1960 இல் அதே வாரத்தில் உருவாக்கப்பட்டன.

ஹவாயில்..

ஹவாயில்..

ஹவாயில் மே தினம், லீ என்ற மரபு வழி வந்த விழாவுடன் இணைந்து கொண்டாடப்படுகிறது. லீ என்பது மலர்களால் ஆன ஒரு மாலை அல்லது நெக்லஸ்.இது 46 செ.மீ. நீளம் இருக்கும்.

ஜெர்மனியில்...

ஜெர்மனியில்...

ஜெர்மனியில் 1933ஆம் வருடம் தொழிலாளர் தினம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

பஹாமாஸ்...

பஹாமாஸ்...

பஹாமாஸ்-ல் தொழிலாளர் வாரம் ஜூன் முதல் வாரத்தில் கொண்டாடப்படுகின்றது, மேலும் அது பொது விடுமுறையாகவும் உள்ளது

சீனாவில் ஒருவாரக் கொண்டாட்டம்...

சீனாவில் ஒருவாரக் கொண்டாட்டம்...

1999 இல், தொழிலாளர் தின விடுமுறையானது 1 நாளில் இருந்து 3 நாட்களாக நீட்டிக்கப்பட்டது. சீன அரசாங்கம் இந்த 3 நாட்களுக்கு முன்னதான மற்றும் வரவிருக்கின்ற வாரயிறுதிகளை ஒன்றிணைத்ததன் மூலமாக 7 நாள் விடுமுறையாக உருவாக்கியது. தொழிலாளர் தின விடுமுறையானது சீனாவில் பொன்விழா வாரங்கள் மூன்றில் ஒன்றாக இருந்தது, இது மில்லியனுக்கும் மேற்பட்ட சீன மக்களை இந்த காலகட்டத்தில் பயணிக்க அனுமதிக்கின்றது.

போலந்து...

போலந்து...

போலந்தில் மே 1 தேசிய விடுமுறை நாளாக இருக்கின்ற வேளையில், அது தொழிலாளர் நாள் என்பதிலிருந்து எளிமையாக "மாநில விடுமுறை நாள்" என்று 1990 இல் மறுபெயரிடப்பட்டது.

இத்தாலி...

இத்தாலி...

ஸ்வீடன், நார்வே, இத்தாலி முதலிய நாடுகள் மே 1ஆம் தேதியைக் கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் 4 நாட்கள்...

ஆஸ்திரேலியாவில் 4 நாட்கள்...

ஆஸ்திரேலியாவில், எல்லைக்கேற்ப, தொழிலாளர்கள் தினம் வெவ்வேறு நாட்களில், கீழ்க்கண்டவாறு கொண்டாடப்படுகிறது:

அக்டோபர் முதல் திங்கட்கிழமை ஆஸ்திரேலிய தலைநகரிலும், தெற்கு ஆஸ்திரேலியாவிலும் கொண்டாடப்படுகிறது. மார்ச் முதல் திங்கட்கிழமை மேற்கு ஆஸ்திரேலியாவிலும், வடக்கு ஆஸ்திரேலியாவில் மே முதல் திங்கட்கிழமையும் கொண்டாடப்படுகிறது. முன்னாட்களில் ‘எட்டு மணி நேர நாள்' என அழைக்கப்பட்ட மார்ச் இரண்டாவது திங்கட்கிழமை, பின்னாளில் உழைப்பாளர் தினமாக விக்டோரியா மற்றும் டாஸ்மானியாவில் கொண்டாடப்படுகிறது.

ரஷ்யாவில்...

ரஷ்யாவில்...

சோவியத் யூனியனில் மே தினம் ஒரு முக்கியமான அரசாங்க விடுமுறை, மிக விமர்சையாக ராணுவ அணிவகுப்பு காட்சியுடன் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் மே 1ஆம் தேதி 1917ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

நியூசிலாந்து...

நியூசிலாந்து...

நியூசிலாந்தில் தொழிலாளர் தினம் அக்டோபர் மாதம் நான்காவது திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கு மூல காரணமானவர் சாமுவேல் பார்னெல்ஸ் என்னும் தச்சு வேலை செய்பவர். அக்டோபர் 28 1890ஆம் வருடம் ஒருநாளைக்கு 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையின் 50வது வருடத்தை ஒரு அணிவகுப்பின் மூலம் கொண்டாடியது. இதன் பிறகு ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் கொண்டாடியது.1899ல் அரசாங்கம் 1900ல் இந்த நாளைப் பொது விடுமுறையாக அறிவித்தது.

ஈரான்...

ஈரான்...

1979 இஸ்லாமியப் புரட்சிக்கு முன்னர், ஈரான் பேரரசில் தொழிலாளர் தினமானது கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள அதே நாளில் விடுமுறையாக இருந்தது. ஈரான் இஸ்லாமியக் குடியரசில் (1979 முதல் தற்போது வரை), தொழிலாளர் தினம் விடுமுறை தினமாக இல்லை, ஆனால் அது சமூகத்தில் முக்கியமான பிரிவினரான தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவிக்க மே 1 இல் அதிகாரப்பூர்வமாக கொண்டாடப்படுகின்றது.

துருக்கி...

துருக்கி...

துருக்கியில், 2009 இலிருந்து மே 1 தொழிலாளர் மற்றும் ஒருமைப்பாடு தினமாகக் கொண்டாடப்படுகின்றது, இது பொதுவிடுமுறை தினமாகும்.

டொபாகோவில்...

டொபாகோவில்...

டிரினிதாத் மற்றும் டொபாகோவில் தொழிலாளர் தினம் ஒவ்வொரு ஜூன் 19 ஆம் தேதியும் கொண்டாடப்படுகின்றது. இந்த விடுமுறை தினமானது 1937 இல் நடைபெற்ற பட்லர் தொழிலாளர் கலவரங்களின் நினைவைக் குறிக்கும் விதமாக இருக்குமாறு 1973 இல் முன்மொழியப்பட்டது.

English summary
For many countries, "Labour Day" is synonymous with, or linked with, International Workers' Day, which occurs on 1 May. Some countries vary the actual date of their celebrations so that the holiday occurs on a Monday close to 1 May. The remainder of this article addresses those countries for whom Labour Day is not linked to International Workers' Day'Daud Abbasi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X