For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குபேரக் கடவுளின் சொத்துமதிப்பை இனி இண்டர்நெட்டில் பார்க்கலாம்: தேவஸ்தானம் அறிவிப்பு

Google Oneindia Tamil News

The TTD has decided to publish Temple asset in website
நகரி: திருப்பதி கோவில் சொத்துக்கள் வெப்சைட்டில் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூட்டம் திருப்பதியில் நடந்தது. இதில் சட்டமன்ற உறுதி அமல்படுத்தும் கமிட்டி தலைவர் சூர்ய பிரகாஷ்ராவ் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி சூர்ய பிரகாஷ் ராவ் கூறியதாவது, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சம்பந்தப்பட்ட அனைத்து சொத்து விவரங்களையும் வெப்சைட்டில் வெளியிட உள்ளோம். இனி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் என்னென்ன, அவை எங்கெங்கு உள்ளது என்று எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

லண்டனில் வருகிய 4-ந்தேதி முதல் சீனிவாச திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 4-ந்தேதி, 5-ந்தேதிகளில் கிழக்கு லண்டனில் சீனிவாச திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. 6-ந்தேதி மில்டன் கெய்ன்ஸ் பகுதியிலும், 11-ந்தேதி மான்செஸ்டரிலும், 12-ந்தேதி ரீடிங் யு.கே. பகுதியிலும், 18-ந்தேதி பெல்பாஸ்ட் பகுதியிலும் சீனிவாச திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக அதிகாரிகள் மற்றும் அர்ச்சககர்கள் அடங்கிய குழுவினர் ஏற்கனவே லண்டன் புறப்பட்டு சென்றுள்ளனர் என்றார் அவர்.

English summary
The Thirumala Tirupathi Devashthanam has decided to publish the temple assets in its website.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X