For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சரப்ஜித் சிங் படுகொலையில் உண்மை என்ன என்பது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்: நரேந்திர மோடி!

By Mathi
Google Oneindia Tamil News

Narendra Modi: Truth about Sarabjit Singh's death must come out
டெல்லி: பாகிஸ்தான் சிறையில் இந்தியரான சரப்ஜித் சிங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உண்மை நிலைமை என்ன என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது அவசியம் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

சரப்ஜித்சிங் படுகொலை குறித்து சமூக வலைதளமான ட்விட்டரில் அவர் பதிவு செய்திருக்கும் கருத்து: "இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் இரண்டுமே சரப்ஜித் சிங் விவகாரத்தில் மக்களுக்கு தவறான தகவல்களை கொடுத்து வருகின்றன. இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும். இந்திய ராணுவ வீரர்களின் தலையைத் துண்டித்தனர் பாகிஸ்தான் ராணுவத்தினர். இப்போது சரப்ஜித் சிங் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் மனிதாபிமானமற்ற இந்த நடவடிக்கைகளுக்கு கடுமையான பதிலடி கொடுக்க மத்திய அரசால் முடியவில்லை" என்று சாடியுள்ளார்.

மேலும் " சரப்ஜித் சிங்கின் மறைவு ஆழ்ந்த வருத்தத்துக்குரியது. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். இந்த இழப்பை ஈடு செய்ய அவரது குடும்பத்தினருக்கு கடவுள் பலத்தை அளிக்க வேண்டும் என்று மற்றொரு ட்விட்டர் பதிவில் மோடி குறிப்பிட்டிருக்கிறார். இதனிடையே மங்களூரில் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோடி, சரப்ஜித் சிங் படுகொலை, சட்ட நீதிகளுக்குப் புறம்பான படுகொலை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

English summary
The truth about Indian prisoner Sarabjit Singh's death on Thursday in Pakistan must come out, Gujarat CM Narendra Modi said, adding,"Centre is unable to give a strong answer to Pakistan's inhuman acts".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X