For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாக். சிறையில் கைதிகளால் தாக்கப்பட்ட சரப்ஜித் சிங் மரணம்: உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Sarabjit singh
லாகூர்: பாகிஸ்தான் சிறைச்சாலையில் கைதிகளால் தாக்கப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங், லாகூர்‌ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் உயிரிழந்தார். அவரது உடலை சிறப்பு விமானம் மூலம் இந்தியா கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கடந்த 1990ம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக கூறி கைது செய்யப்பட்ட சரப்ஜித் சிங்கிற்கு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

பாகிஸ்தானின் கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரப்ஜித் சிங்கை சக கைதிகள் சிலர் கடந்த 26ம் தேதி கொடூரமாக தாக்கினர். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த அவர், லாகூர் ஜின்னா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து சரப்ஜித் சகோதரி, மனைவி மற்றும் 2 மகள்கள், லாகூர் சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரப்ஜித் சிங்கை சந்தித்தனர்.

சரப்ஜித், நேற்று, மீள முடியாத கோமா நிலைக்குச் சென்று விட்டதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். அவருக்கு உயரிய சிகிச்சை அளிக்க இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரிடம், இந்தியத் தூதர் வலியுறுத்தியதாக, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை ஒரு மணியளவில், சரப்ஜித் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவக் குழுவின் தலைவர் சௌகத் தெரிவித்தார். இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கும், சரப்ஜித் உயிரிழந்த தகவலை ஜின்னா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

சரப்ஜித் சிங்கை சந்தித்து விட்டு நேற்றுதான் அவரது குடும்பத்தினர் இந்தியா திரும்பினர் இந்த நிலையில் அதிர்ச்சிகரமான தகவல் அவர்களை தாக்கியுள்ளது. கடந்த 6 நாட்களாக கோமா நிலையில் உயிருக்குப் போராடிய சரப்ஜித் சிங் உயிரிழந்தது, அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

English summary
Indian prisoner in Pakistan Sarabjit Singh died of a cardiac arrest at Lahore's Jinnah hospital on Thursday after batting for life for nearly a week. The announcement from Pakistan came late in the night. Demands are now growing for his body to be brought back to India. Sources say that the body may be brought back by Thursday afternoon. While his body has been shifted to a mortuary, Pakistan has formed a medical team to conduct the autopsy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X