For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பின்லேடனின் 2ம் ஆண்டு நினைவு நாள் பேரணி..தீவிரவாதிகள் பங்கேற்பு

By Mathi
Google Oneindia Tamil News

Pakistanis remember bin Laden as 'Islamic hero'
இஸ்லாமாபாத்: அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனின் 2ம் ஆண்டுநினைவு நாளையொட்டி பாகிஸ்தானில் நடைபெற்ற பிரம்மாண பேரணியில் ஏராளமான தீவிரவாதிகள் கலந்து கொண்டனர்.

ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு மே 1-ந்தேதி பாகிஸ்தானின் அபோதாபாத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை அமெரிக்காவின் நேவி சீல் என்ற அதிரடிப்படையினர் சுட்டுக் கொலை செய்தனர். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பின்லேடனின் முதலாமாண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது.

நேற்று முன் தினம் 2-வது நினைவு தினம் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கடைபிடிக்கப்பட்டது. பாகிஸ்தான் நாட்டின் வட மேற்கு நகரமான குவெட்டாவில் பேரணி நடத்தப்பட்டது. இதில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதரவு அமைப்பான ஜமியாத் உலமா இ-இஸ்லாம் என்ற அமைப்பினர் கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்றவர்கள் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

English summary
Al-Qaida supporters gather in Pakistan, chanting, carrying photos of 9/11 mastermind bin Laden on 2nd anniversary of his death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X