For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாமக மாஜி மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தியும் கைது

Google Oneindia Tamil News

சென்னை: பாமக தரப்பில் மேலும் ஒரு தலைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆவார்.

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே மூர்த்தி உள்பட 30க்கும் மேற்பட்டோர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரை விடுதலை செய்யக் கோரி போராட்டம் நடத்த குழுமினர்.

ஆனால் போலீஸார் அங்கு போராட்டம் நடத்த தடை விதித்திருந்தனர். இதையடுத்து தடையை மீறி போராட்டம் செய்ய முயன்ற மூர்த்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 33 பேர் மீதும், தடையை மீறி அனுமதியில்லாமல் கூடுவது, வேண்டுமென்றே பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது ஆகிய இரண்டு வழக்குகள் பதிவு செய்து சைதாப்பேட்டை 9வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் சுதாராணி முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.

இதையடுத்து 33 பேரையும் மே 17ம் தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன் பின்னர் மூர்த்தி உள்ளிட்ட 33 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

English summary
Former union minister A K Murthy and 32 other PMK men were arrested in Chennai and lodged in Puzhal prison for attempting to stage protest against the arrest of Dr Ramadoss.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X