For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹெலிகாப்டர் ஊழல்- மாஜி தளபதி தியாகி தேடப்படும் குற்றவாளி: லோக்சபாவில் ஏ.கே.ஆண்டனி தகவல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Lookout notice against Tyagi in chopper deal: Antony
டெல்லி: ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில், இந்திய விமானப்படை முன்னாள் தளபதி தியாகியை தேடப்படும் குற்றவாளியாக சிபிஐ அறிவித்து இருப்பதாக நாடாளுமன்ற லோக்சபாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து திங்கட்கிழமை மக்களவையில், எழுத்துப் பூர்வமாக அமைச்சர் ஏ.கே. அந்தோணி அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக ஏராளமானோரை சிபிஐ அறிவித்துள்ளது.

இத்தாலியில் இருந்து பெறப்பட்ட முதற்கட்ட ஆவணங்கள் மூலம், தியாகி மீதான குற்றச்சாட்டை சிபிஐ உறுதிப்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.

அதில் இந்திய விமானப்படை முள்ளாள் தளபதியும் ஒருவர் என்று அந்தோணி குறிப்பிட்டுள்ளார். ஆனால், தியாகி என்ற பெயரை அமைச்சர் அந்தோணி தமது பதிலில் குறிப்பிடவில்லை.

இத்தாலியில் இருந்து வாங்கப்பட்ட ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு தொடர்பாக தியாகியின் வங்கிக் கணக்கை சிபிஐ அதிகாரிகள் அண்மையில் முடக்கிய நிலையில், தற்போது, அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து உள்ளனர்.

English summary
The Central Bureau of Investigation has issued a lookout notice against a former Indian Air Force chief in connection with alleged irregularities in procurement of VVIP helicopters, Defence Minister A K Antony told the Lok Sabha on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X