For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிரியா விவகாரம்: ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் கெர்ரி

Google Oneindia Tamil News

John Kerry and Putin
மாஸ்கோ: ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் இன்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியை மாஸ்கோவில் வைத்து சந்திக்க இருப்பதாக ரஷிய அதிபரின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 29ல் ஒபாமாவுடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடிய புடின், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரின் ரஷ்ய பயணத்தின் போது அவரை நேரில் கண்டு பேசுவதாக வாக்களித்திருந்தார். அதை நிறைவேற்றும் விதமாக இந்த சந்திப்பு நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜான் கெர்ரியின் ரஷ்ய பயணத்தின் போது, ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ்வை மே 7-8 தேதிகளில் சந்திப்பதாக முன்கூட்டியே திட்டமிடப் பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பின் போது, சிரியா மற்றும் ஈரான் உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் ஐரோப்பிய ஏவுகணை பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Russian President Vladimir Putin will have a meeting with U.S. Secretary of State John Kerry on Tuesday, May 7, when Kerry pays a visit to Russia, president's press secretary Dmitry Peskov said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X