For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரபல மதுபான நிறுவனம் ஜானிவாக்கரின் எம்.டி. ஆகும் இந்தியர்

Google Oneindia Tamil News

Indian to head world’s top liquor company
மும்பை: உலகிலேயே சிறந்த மதுபான தயாரிப்பு நிறுவனமான ஜானி வாக்கரின் முக்கிய நிர்வாகப் பொறுப்பினை தலைமை தாங்க, ஒரு இந்தியர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் பிறந்தவரான, 52 வயதுடைய இவான் மெனிசிஸ் வணிக மேலாண்மையில் பட்டம் பெற்றவர். இவர், இந்தியாவின் தலை சிறந்த நிர்வாகிகளாக விளங்கும் அன்ஷு ஜெயின், இந்திரா நூயி, அஜய் பங்கா, ராகேஷ் கபூர் போன்றவர்களுடன் சம காலத் தொடர்பில் உள்ளவர்.

கிழக்கத்திய நாடுகளில் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கத் துவங்கியதுமே பாரம்பரியமான ஐரோப்பிய நிறுவனங்கள் தங்களுடைய நிர்வாகப் பொறுப்புகளை இந்தியர்களிடம் ஒப்படைக்க ஆரம்பித்தன. அந்த வரிசையில் தற்போது இவான், டியாஜியோ நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க இருக்கின்றார்.

இந்நிறுவனத்தின் இயக்குனர் பொறுப்பில் நீண்ட ஆண்டுகளாக பணியாற்றி வந்த பால் வால்ஷ், அடுத்த ஆண்டு மத்தியில்தான் பதவி விலகுவதாக முடிவு செய்திருந்தார். ஆயினும், இப்போது வரும் ஜூலை முதலே, இவான் மெனிசிஸ் தலைமைப் பொறுப்பை ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் விஜய் மல்லையாவின், 2.6 பில்லியன் மதிப்புள்ள யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனப் பங்குகளை, ஜானி வாக்கர் நிறுவனம் ஏற்கின்றது என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து அவற்றின் பங்குகள் சந்தையில் உயர்ந்து வருகிறது.

English summary
India-born Ivan Menezes is the new CEO of Diageo, the world's largest drinks company-a development that reinforces the growing trend of Indians heading high-profile global corporate giants.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X