For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விராத் கோஹ்லியைப் பார்த்து ஊளையிட்டு கிண்டலடித்த கிங்பிஷர் ஊழியர்கள்

Google Oneindia Tamil News

Virat kohli
டெல்லி: விஜய் மல்லையாவிடமிருந்து பல மாதமாக சம்பளம் வாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள், டெல்லிக்கு வந்த மல்லையாவை உரிமையாளராகக் கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராத் கோஹ்லியைப் பார்த்து ஊளையிட்டு தங்களது எதிர்ப்பைக் காட்டினர்.

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு பல மாதமாக சம்பளப் பாக்கி உள்ளது. அதைக் கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார் மல்லையா. இதுதொடர்பாக போராட்டங்களையும் தொடர்ந்து கொண்டுள்ளனர் ஊழியர்கள்.

இந்த நிலையில் விராத் கோஹ்லி டெல்லிக்கு வந்தார். விமான நிலையத்தில் அவரைப் பார்த்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள், சத்தமாக ஊளையிட்டும், கிண்டலடித்தும் வரவேற்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்தார் கோஹ்லி. இருப்பினும் நிலைமையைப் புரிந்து கொண்டு அங்கிரு்ந்து போய் விட்டார்.

இத்தனைக்கும் கோஹ்லி பெங்களூர்க்காரர் அல்ல, சுத்தமான டெல்லிக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kingfisher Airlines employees, who haven't received their salaries for months, adopted a unique form of protest. They booed Royal Challengers Bangalore's Virat Kohli at the Delhi airport on Tuesday. Virat is the captain of the team owned by Vijay Mallya who also owns Kingfisher airlines.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X