For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடலோர கர்நாடகத்தில் பாஜகவுக்கு 'வெள்ளை'யடித்த மக்கள்!

Google Oneindia Tamil News

மங்களூர்: கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களில் பாஜகவுக்கு பெரும் தோல்வி கிடைத்துள்ளது. அங்கு ஒரே ஒரு தொகுதியில்தான் இந்தக் கட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

தெற்கு கடலோர மாவட்டங்களான தென் கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களில் பாஜகவுக்கு ஒரே ஒரு இடம்தான் கிடைத்துள்ளது. தென் கன்னடா மாவட்ட்தில் மொத்தம் உள்ள 8 தொகுதிகளிலும் அது தோல்வியைத் தழுவியது.எட்டு தொகுதிகளிலும் காங்கிரஸே வென்றுள்ளது.

உடுப்பி மாவட்டத்தில் மொத்தம் 5 தொகுதிகள் உள்ளன.அதில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜகவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

2008 தேர்தலிலஇந்த இரு மாவட்டங்களிலும் உள்ள 13 தொகுதிகளில் 8 தொகுதிகளை பாஜக பறித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த இருபது வருடமாக இந்த மாவட்டங்களில் பாஜக பலத்துடன் திகழ்ந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

மங்களூரில் கடந்த சில வருடங்களி்ல் இந்து அமைபப்பினர் குறிப்பாக ஸ்ரீராம் சேனா மற்றும் ஹிந்து ஜாகிரன் வேதிகே ஆகியவற்றைச் சேர்ந்தவர், மாரல் போலீஸிங் என்ற பெயரில் காதலர் தினம் உள்ளிட்டவற்றைக் கொண்டாடியவர்கள் மீதும், பார்ட்டி வைத்து கொண்டாடியவர்கள் மீதும் பெண் என்றும் கூட பாராமல் மிகக் கொடூரமாக தாக்கிய சம்பவங்கள்தான் பாஜகவை போட்டுப் பார்த்து விட்டதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

பப்புளுக்குள் புகுந்து அடிப்பது, பார்ட்டி நடக்கும் வீடுகளுக்குள் புகுநது தாக்குவது, பெண்களையும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குவது, யாராவது காதல் ஜோடியை பொது இடத்தில் பார்த்து விட்டால் மிரட்டுவது என அட்டூழியம் செய்து வந்தனர் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். இதுதான் தற்போது பாஜகவின் தலையில் வந்து விடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடலோர மாவட்டங்கள் மட்டுமல்லாமல், பாஜக செல்வாக்குடன் திகழ்ந்து வந்த அர்பன் பெங்களூர் மற்றும் பெல்காம் மாவட்டங்களிலும் அதன் செல்வாக்கு தகர்ந்து போய் விட்டது.

English summary
It's a whitewash for the BJP in Karnataka's coastal districts -- Dakshina Kannada, home to Mangalore, and Udupi. In Dakshina Kannada, the BJP lost all the eight Assembly segments to the Congress and in Udupi, it won just a single seat out of five. In 2008, the BJP had won eight of the 13 seats from these two districts, which the party has firmly established as its strongholds for the past decade.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X