For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமைச்சரவைக் கூட்டம்: பன்சால் வரவில்லை - பதவியிலிருந்து விரைவில் நீக்கம்?

Google Oneindia Tamil News

Pawan Bansal
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் இன்று மாலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சர்ச்சையில் சிக்கியுள்ள மத்திய ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் கலந்து கொள்ளவில்லை. இதனால் விரைவில் அவரை பிரதமர் பதவி நீக்கம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல சிபிஐ அறிக்கையில் கை வைத்து சுப்ரீம் கோர்ட்டின் கடும் கண்டனத்துக்குள்ளான சட்ட அமைச்சர் அஸ்வனி குமாரும் விரைவில் தூக்கப்படவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

பிரதமரின் இல்லத்தில் இன்று மாலை பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அதில் பன்சால் பங்கேற்கவில்லை. அதேசமயம் அஸ்வனி குமார் பங்கேற்றார்.

பன்சால் மீது ரயில்வே வாரிய ஊழல் மற்றும் நிலக்கரி பேர ஊழல் வழக்குகளில் பெயர் அடிபட்டு கெட்டுப் போயுள்ளது. இதனால் காங்கிரஸும் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. தான் ராஜினாமா செய்வதாக ஏற்கனவே பன்சால் கட்சி மேலிடத்திடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் இதுவரை ராஜினாமா ஏற்கப்படாமல் உள்ளது. ஆனால் நாடாளுமன்றத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஸ்தம்பிக்க வைத்து வருவதால் பன்சால் நீக்கப்படலாம் என்று தெரிகிறது. இதனால்தான் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பன்சால் பங்கேற்கவில்லை என்றும் பேசப்படுகிறது.

பன்சாலை நீக்க பிரதமர் தீவிரமாக இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. அதேபோல அஸ்வனி குமாரும் நீக்கப்படலாம் என்று தெரிகிறது. இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்க முடியும் என்று பிரதமரும், காங்கிரஸும் கருதுவதாக தெரிகிறது.

English summary
Railway Minister Pawan Kumar Bansal skipped a Cabinet meet at Prime Minister Manmohan Singh's residence on Thursday even as Law Minister Ashwani Kumar attended it. Both Bansal and Ashwani are under fire over the Railway Board bribery case and the coal scam probe respectively. Sources had earlier said that the Congress wanted the PM to decide on Ashwani's fate. Sources said the PM was seriously considering the possibility of replacing Ashwani.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X