For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விலைமதிப்பில்லா பெண்களின் கல்விக்காக 7.2 மில்லியன் டாலர் ஓவியத்தை ஏலம் விட்ட மடோனா

Google Oneindia Tamil News

Madonna sells Leger painting for $7.2m
நியூயார்க்: விலைமதிப்பில்லா பெண்களின் கல்விக்காக விலை மதிப்புள்ள ஒரு பொருளை ஏலத்தில் விடுவதாக கூறி 7.2 மில்லியன் டாலருக்கு ஒரு ஓவியத்தை மடோனா விற்றுள்ளார்.

பாப் இசை உலகில் பெயரும், புகழும் பெற்று விளங்குபவர் மடோனா . இவர் பெண்கள் கல்வியிலும் ஆர்வம் கொண்டு, ரே ஆப் லைட் என்ற தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்.

இத்தொண்டு நிறுவனம் மூலம், மத்தியக் கிழக்கு நாடுகள் மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில் உள்ள பெண்களின் கல்விக்கு மடோனா உதவி புரிந்து வருகிறார்.

3.4 மில்லியனுக்கு வாங்கிய ஓவியம்...

கடந்த 1990ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு ஏலத்தில், மடோன்னா, பிரான்ஸ் நாட்டு ஓவியரான பெர்னாண்ட் லெகரின் ஓவியம் ஒன்றை 3.4 மில்லியன் டாலருக்கு வாங்கியிருந்தார்.

வட்டம்... சதுரம்...

1921ஆம் ஆண்டு வரையப்பட்ட, கியூபிஸ்ட் ஆர்ட் என்ற வகையைச் சேர்ந்த அந்த ஓவியத்தில், மூன்று பெண்களின் உருவம், சதுரங்கள், வட்டங்கள் போன்ற வடிவங்களில் வரையப்பட்டிருக்கும்.

விலை மதிப்பில்லாத பெண்கள் கல்வி...

செவ்வாய்க் கிழமை அன்று ஏலத்திற்கு முன்னால், விலைமதிப்பில்லா பெண்களின் கல்விக்காக விலை மதிப்புள்ள ஒரு பொருளை ஏலத்தில் விடுவதாக மடோனா கூறி இருந்தார்.

7.2 மில்லியனுக்கு விற்பனை...

இந்த ஓவியம் ஏலத்தில் 7.2 மில்லியன் டாலரை அவருக்குப் பெற்றுத்தந்தது. இதற்குத் துணை புரிந்த அனைவருக்கும், இணையதளத்தின் மூலம் மடோன்னா நன்றி கூறியிருந்தார் .

பெண்கல்விக்காக செலவிடப்படும்...

இந்தத் ஏலத்தொகை முழுவதும் அவரது தொண்டுநிறுவனத்தின் மூலம் பெண்களின் கல்விக்காக செலவிடப்படும் எனத் தெரிவித்துள்ளார் மடோனா.

English summary
A painting by Fernand Leger owned by Madonna has been sold for $7.2 million (£4.7m) in New York.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X