For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நோ ஏசி... சோ..வெள்ளை சட்டை, வெயிஸ்ட் கோட் போட்டு ஆபிஸுக்கு வாங்க...: பாகிஸ்தானின் புது உத்தரவு

Google Oneindia Tamil News

Air Conditioners
இஸ்லாமாபாத்: அதிகரித்துவரும் மின்பற்றாக்குறையை சமாளிக்க பாகிஸ்தான் அரசு, வரும் மே 15ஆம் தேதி முதல், அலுவலகங்களில் குளிர்சாதன வசதிகளைப் பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவிட்டுள்ளது.

மேலும் கோடையில் வெப்பத்தை சமாளிக்கும் விதமாக என்ன மாதிரியான ஆடைகளை அணியலாம் என்றும் அரசு யோசனைகள் தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவினை அனைத்து அரசு அலுவலகங்களிலும், வரும் 15ஆம் தேதி முதல் நிலைமை சீரடையும்வரை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

வெள்ளை சட்டை... வெயிஸ்ட் கோட்டு...

பணிபுரிபவர்களுக்கு வசதியாக ஆடையாக, வெயிஸ்ட் கோட்டுடன் கூடிய வெள்ளை அல்லது வெளிர் நிறத்தில் சட்டையும், முழு பாண்ட்டும், சாக்ஸ் மற்றும் நாடாக்கள் இல்லாத சாதாரண ஷூக்களும் அணியலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

பிரதமர் ஆபிஸும் ஹாட் தான்...

பிரதமர் பொறுப்பில் செயல்படும் மிர் ஹசார்கான் கோசோ, தனது இல்லத்தில் குளிர்சாதன வசதிகளை ஏற்கனவே தடை செய்துள்ளார். மற்ற இடங்களில் இத்திட்டத்தினை செயல்படுத்த ஆரம்பிக்க ஒரு வார கால அவகாசம் கொடுக்கப் பட்டுள்ளது.

மின்சிக்கனம் கடைபிடியுங்கள்...

இத்தகைய நடவடிக்கைகள் மின்பற்றாக்குறையை சமாளிக்க அரசிற்கு துணை புரியும் என்று தெரிவித்துள்ள பிரதமர், பொது மக்களையும் அவர்களுடைய இருப்பிடங்களிலும், பணிபுரியும் இடங்களிலும் மின்சிக்கனத்தைக் கடைப்பிடித்து அரசிற்கு உதவும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாடு மாதிரியே...

வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு செல்வதால், நாட்டில் மின்பற்றாக்குறையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. தலைநகர் இஸ்லாமாபாத்தில், எட்டு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது என்றால், பிற பகுதிகளில் தினமும் 18 மணி நேரம் கூட மின்சாரம் இல்லாமல் மக்கள் இருக்கின்றனர்.

English summary
Grappling with power outages across the country, the Pakistan government on Wednesday banned the use of airconditioners in its offices from May 15 and introduced a "summer dress code"
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X