For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்போஸிஸை பின்னுக்குத் தள்ளி இரண்டாமிடம் பெற்ற காக்னிஸன்ட்!!

By Shankar
Google Oneindia Tamil News

Cognizant surpasses Infosys to become 2nd largest IT firm in terms of revenues
நியூயார்க்: இன்போஸிஸை பின்னுக்குத் தள்ளி, இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமாக உயர்ந்துள்ளது காக்னிஸன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம்.

மார்ச்சுடன் முடிந்த நிதியாண்டில் இந்த நிறுவனம் பெற்ற வருவாயின் அடிப்படையில் இரண்டாவது பெரிய நிறுவனமாக பட்டியலிட்டுள்ளது அமெரிக்காவின் நாஸ்டாக்.

கடந்த ஆண்டின் நான்கு காலாண்டிலும் மொத்தம் 7.655 பில்லியன் டாலர்களை வருவாயாகப் பெற்றுள்ளது காக்னிஸன்ட். இது இன்போஸிஸ் வருவாயை விட 255 மில்லியன் டாலர் அதிகமாகும்.

இது மட்டுல்ல, செயல் திறன் அடிப்படையிலும் இன்போஸிஸை முந்தியுள்ளது காக்னிஸன்ட். உதாரணத்துக்கு கடந்த மார்ச்சுடன் முடிந்த காலாண்டில் காக்னிஸன்ட்டின் வருவாய் 3.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் எந்த முன்னணி ஐடி நிறுவனத்தின் வளர்ச்சியைக் காட்டிலும் இது சிறந்ததாகக் கருதப்படுகிறது.

ஆண்டு அடிப்படையில் பார்த்தாலும் கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 18.1 சதவீத வளர்ச்சியுடன் 2.02 பில்லியனை வருவாயாகப் பெற்றிருந்தது காக்னிஸன்ட். அதற்கு முந்தைய ஆண்டில் இது 1.71 பில்லியன் டாலராக இருந்தது.

நிகர வருவாய் 243 மில்லியன் டாலரிலிருந்து 284.2 மில்லியன் டாலராக உயர்ந்தது.

இதுகுறித்து நிறுவனத்தின் சிஇஓ பிரான்ஸிஸ்கோ டிசோஸா கூறுகையில், "எங்கள் நிறுவனத்தின் செயல்பாடு கடந்த ஆண்டில் மிக வலுவாக உள்ளது. பலவகை சேவைகள் மூலம் ஆரோக்கியமான தேவையை உருவாக்கியுள்ளோம்," என்றார்.

English summary
Nasdaq listed Cognizant Technology Solutions, which came into existence some 13 years after Infosys, surpassed the latter to become second largest IT company of India in terms of revenues at the end of March quarter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X