For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடிட்டர், என்ஜீனியர்… இது மூன்றாம் இடம் பிடித்த மாணவர்களின் லட்சியம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடத்தை 9 பேர் பகிர்ந்து கொண்டுள்ளனர். இவர்கள் எடுத்த மதிப்பெண்கள் 1187 இதில் பெரும்பாலான மாணவர்கள் இஞ்சினியர் ஆகவேண்டும் என்று கூறியுள்ளனர். ஒரு சிலர் டாக்டர் ஆகவேண்டும் என்றும், சிலர் சி.ஏ படித்து ஆடிட்டர் ஆகவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

என்ஜீனியர் ஆகணும்

ஆவடியைச் சேர்ந்த எஸ். முத்து மணிகண்டன் எலக்ட்ரானிக்ஸ் இஞ்சினியர் ஆகவேண்டும் என்று கூறியுள்ளார்.

இதேபோல் தாம்பரத்தை சேர்ந்த நிவேதிதாவிற்கு என்ஜீனியரிங்கில் இ.சி.இ படிக்கவேண்டும் என்கிறார்.

சி.ஏ படிக்கணும்

போரூரைச் சேர்ந்த பூஜா. எஸ். குமார் தன்னுடைய எதிர்கால லட்சியமாக சி.ஏ. படித்து ஆடிட்டர் ஆகவேண்டும் என்கிறார். எல்லோரும் டாக்டர், இஞ்சினியர் என்று கூறும் போது இவருக்கு மட்டும் சி.ஏ. லட்சியமாக உள்ளது.

நாங்களும் டாக்டர்தான்

மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற ரஜேஸ்வரி, கலைவாணி,விஷ்ணுவர்த்தன்,மனோதினி, ரவீனா ஆகியோர் டாக்டர் ஆகி சேவை செய்வதே லட்சியம் என்று கூறியுள்ளனர். அதேபோல் நாமக்கல் கிரீன்பார்க் பள்ளியில் படித்த கண்மணி மருத்துவம் படித்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்று கூறியுள்ளார்.

English summary
3rd place students in +2 exams want to become an auditor and engineers in future.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X