For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரிசல்ட் தெரியலையே? கண்ணீருடன் தவிக்கும் திண்டுக்கல் மாணவி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திண்டுக்கல்: திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் ப்ளஸ் டூ தேர்வு எழுதிய மாணவி ஒருவரது பெயர் விடுபட்டுள்ளதால் தேர்வு முடிவு தெரியாமல் தவித்து வருகிறார். அவரது கேள்விக்கு பதிலளிக்காமல் கல்வித்துறை அதிகாரிகள் அலட்சியம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

தாமரைப்பாடி என்ற ஊரைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவரது மகள் அமுதா. இவர் திண்டுக்கல் அருகே ம.மு.கோவிலூரில் உள்ள சி.எஸ்.எம்.ஏ மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து தேர்வு எழுதியுள்ளார்.

இந்தநிலையில் நேற்று தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்வதற்காக பள்ளிக்கு வந்த மாணவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தேர்வு முடிவுகள் பட்டியலில் அந்த மாணவியின் பெயரும், தேர்வு எண்ணும் இடம் பெறவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, தனது தந்தையுடன் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு சென்று விளக்கம் கேட்டுள்ளார்.

"எப்படி மிஸ் ஆச்சுன்னு தெரியல" பல லட்சம் பேரு தேர்வு எழுதும் போது இது மாதிரி ஒன்னு ரெண்டு தப்பு நடக்கத்தான் செய்யும். நாளைக்கு வாங்க என்னன்னு பாக்கலாம்" என்ற அலட்சிய பதிலே கிடைத்திருக்கிறது.

அதைத் தொடந்து, அழுது கொண்டே திரும்பி சென்ற மாணவி அமுதா, இன்றும் மாவட்ட கல்வி அலுவலகத்தில் தனது முடிவைத் தெரிந்துக் கொள்வதற்காக கண்ணீருடன் காத்திருக்கிறார்.

1000 மார்க் வரும்

தனது மகள் அமுதா கண்டிப்பாக 1000 மதிப்பெண்களுக்கு மேலே எடுத்திருப்பார் என்று கூறினார் அவரது தந்தை பாலசுப்பிரமணியன்.

ரிசல்ட் என்னவென்றே தெரியவில்லை. எதுவுமே இல்லாம நம்பரை காணும்னு சொல்றாங்க. சி.இ.ஓ ஆபீசுக்கு வந்து கேட்டதுக்கு இதெல்லாம் சகஜம் தான், நாளைக்கு வந்து பாருங்கன்னு அனுப்பிட்டாங்க. இன்னிக்கு வந்ததுக்கு மெயில் பாத்துட்டு சொல்றோம்னு சொல்றாங்க. ரிசல்ட் தெரியாமல் என் மகள் சாப்பிடக்கூட மாட்டேன் என்று அழுதுகிட்டே இருக்கா என்கிறார் வேதனையுடன்.

English summary
A Dindigul girl is stranded after her number is missing in +2 results.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X