For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாப்ளே, 'பாமக காரங்க' கல்லடிக்கிறாங்க.. ஹெல்மட் போட்டுட்டு பஸ்ஸை ஓட்டு!!!!

Google Oneindia Tamil News

Govt bus drivers wear helmet to avoid stone pelting!
சென்னை: பாமகவினர் மற்றும் மர்ம நபர்கள் அரசுப் பேருந்துகள் மீது கல்வீசித் தாக்குவதால், பஸ் டிரைவர்கள் ஹெல்மட் அணிந்து பஸ்களை ஓட்டுமாறு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளதாம். இதனால் அரியலூர் மாவட்டத்தில் பல பேருந்துகளின் ஓட்டுநர்கள் தற்போது ஹெல்மட்டுடன் பஸ் ஓட்டும் வினோதக் காட்சியை மக்கள் பார்த்து வியந்து நிற்கின்றனர்.

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி, ஜெ.குரு, ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதிகளில் பாமகவினர் பேருந்துகள் மீது கல்வீசி தாக்கி வருகின்றனர். இதனால் கடந்த பத்து நாட்களாக ஜெயங்கொண்டம் பகுதியில் பேருந்துகள் குறைவாகவே இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். பேருந்துகள் சரியாக இயக்கப்படாததால் ஜெயங்கொண்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் ஜெயங்கொண்டத்திற்கு வராததால் நகர் முழுவதும் வெறிச்சோடிக் காணப்படுகின்றது. வியாபாரிகள் கடைகளை தினமும் திறந்து வைத்துக்கொண்டு காத்திருக்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.

மேலும் அடிக்கடி பேருந்துகள் மீது கல் வீசி தாக்கப்படுவதால் ஓட்டுனர்கள் சிலர் காயமடைந்தனர். இதனால் பயணிகள் மற்றும் ஓட்டுநர்களின் நலன் கருதி அரசு போக்குவரத்து கழகம் ஜெயங்கொண்டம் கிளையில் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு தலைக்கவசம் வழங்கப்பட்டுள்ளது.

English summary
Govt bus drivers in Jayamkondam are wearinghelmet to avoid stone pelting while driving buses.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X