For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவில் இளவரசர் ஹாரியை மொய்த்தெடுக்கும் இளம்பெண்கள்

By Siva
Google Oneindia Tamil News

Ladies swoon as Prince Harry begins US tour
வாஷிங்டன்: இங்கிலாந்து இளவரசர் ஹாரி ஒரு வார சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் வருகையை அறிந்து அவரது ரசிகைகள் குஷியாகியுள்ளனர்.

இங்கிலாந்து இளவரசர் ஹாரி ஒரு வார கால சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் ஹாலோ டிரஸ்ட் ஏற்பாடு செய்திருந்த புகைப்படக் கண்காட்சிக்கு சென்றார். கேபிடல் ஹில்லில் உள்ள ரஸல் செனட் அலுவலக கட்டிடத்தில் நடந்த புகைப்பட கண்காட்சியில் ஹாரியை காண ஏராளமான இளம் பெண்கள் வந்திருந்தனர். ஆனால் அவர் பெண்கள் பக்கம் திரும்பாமல் வியட்நாம் போர் வீரர் செனடர் ஜான் மெக்கெய்னிடம் சீரியஸாக பேசிக் கொண்டிருந்தார். மெக்கெயினின் மனைவி சிண்டி ஹாலோ டிரஸ்ட் உறுப்பினர் ஆவார்.

ஹாரி கன்னிவெடிகளை கண்டுபிடிக்கும் டிடெக்டர்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. ஹாலோ டிரஸ்ட் துவங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. அந்த டிரஸ்ட் மூலம் இதுவரை உலகம் முழுவதும் 1.4 மில்லியன் கன்னிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிரஸ்டுக்கு ஹாரியின் தாய் இளவரசி டயானாவும் உதவி செய்துள்ளார்.

ஹாலோ டிரஸ்ட் அங்கோலாவில் கன்னிவெடிகளை அகற்றியது. அது கன்னிவெடிகளை அகற்றிய இடத்திற்கு தான் விபத்தில் சாகும் முன்பு இளவரசி டயானா சென்றுள்ளார்.

ஹாரி கடந்த முறை அமெரிக்கா வந்தபோது பெண்களுடன் ஹோட்டல் அறையில் நிர்வாணமாக இருந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதனால் இந்த முறை சமத்துப் பிள்ளையாக இருக்க முயற்சி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Prince Harry is touring in US. The red haired prince will be there for a week. Diana's little boy has broken the hearts of many young women who greeted him in the Capitol hill as he showed interest in landmines.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X