For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசியல் லாபத்துக்காக கச்சத்தீவுக்கு உரிமை கோருகிறார் தமிழக முதல்வர் ஜெ.: சொல்கிறார் டக்ளஸ்

By Mathi
Google Oneindia Tamil News

Douglas devananda
யாழ்ப்பாணம்: அரசியல் லாபத்துக்காக கச்சத்தீவுக்கு உரிமை கோருகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சாடியுள்ளார்.

கச்சத்தீவை மீட்கக் கோரி தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்தார். இதைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியும் கச்சத்தீவை மீட்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் இலங்கை அமைச்சரும் ஈ.பி.டி.பி. இயக்கத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, சட்டரீதியான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது. இதனால், கச்சதீவை தமிழ்நாடு எக்காரணம் கொண்டும் உரிமை கோர முடியாது.

அரசியல் இலாபத்துக்காகவே தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா கச்சதீவின் உரிமையை கோருகிறார். கச்சதீவு தொடர்பான விவகாரம் இலங்கை - இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். இதனால் அரசியல் நோக்கமின்றி கச்சத்தீவு விவகாரத்தைப் பார்க்க வேண்டும் என்றார் அவர்.

English summary
Tamil Nadu has no right to demand Kachchatheevu, for it is Sri Lanka's as per an agreement, Sri Lanka's Traditional Industries and Small Enterprises Development Minister Douglas Devananda has said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X