For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாதி ‘உலகம் சுற்றிய வாலிபன்’: சாதனை டிஸ்லெக்சியா பைலட்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: டிஸ்லெக்சியா நோய் என்பது கற்றல் குறைப்பாடு நோய் என்று திரைப்படம் மூலம் நமக்கு அறிமுகமானது தான். அதே சமயம் சாதனைகள் புரிவதற்கு எதுவுமே தடையாக அமையாது, மனதிருந்தால் நிச்சயமாக மார்க்கம் உண்டு என்பதற்கு உதாரணமாக நம்மில் பலர் அவ்வப்போது, சாதனைகள் மூலம் நிரூபிக்கத்தான் செய்கிறார்கள்.

டிஸ்லெக்சியா எனும் கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மலேசியாவைச் சேர்ந்த 21 வயது இளைஞர் விமானத்தில் பாதி உலகை சுற்றி சாதனை புரிந்துள்ளார்.

இந்த விமானியின் பெயர் ஜேம்ஸ் அந்தோணி. இந்த சாதனைப் பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று கராச்சி வழியாக கொல்கத்தா நகரை வந்தடைந்தார்.

6400 நாட்டிகள் மைல்…

6400 நாட்டிகள் மைல்…

இவர் மலேசியாவின் லாங்கவி எனும் இடத்தில இருந்து கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி தனது பயணத்தை தொடங்கினர். இதுவரை இந்த பயணத்தில் 6400 நாட்டிகள் மைல் தொலைவை அவர் கடந்துள்ளார்.

கோலாலம்பூரில் நிறைவு…

கோலாலம்பூரில் நிறைவு…

இவர் மே 15-ம் தேதி புக்கெட் வழியாக கோலாலம்பூர் திரும்பி பயணத்தை நிறைவு செய்யவுள்ளார்.

உன்னால் முடியும் தோழா…

உன்னால் முடியும் தோழா…

இந்த சுற்றுப்பயணம் குறித்து அவர் கூறியதாவது, ‘எதுவும் முடியாதது இல்லை என்பதை உலகில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் சொல்லவும், மக்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த பயணத்தை மேற்கொள்ள விரும்பினேன்' என அவர் கூறினார்.

உலகம் சுற்றிய வாலிபன்…

உலகம் சுற்றிய வாலிபன்…

முதன் முதலில் மிகக் குறைந்த வயதில் ஒரு எஞ்சின் கொண்ட விமானத்தில் உலகை சுற்றி வந்தவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

English summary
Braving the inborn difficulty to read numbers and symbols, 21-year-old dyslexic Malayasian pilot Capt James Anthony Tan has managed to fly half-way around the world in a tiny, single Cessna 210 Eagle aircraft.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X