For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொதுநுழைவுத் தேர்வு அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடக்காது: உச்சநீதிமன்றம்

By Mathi
Google Oneindia Tamil News

Supreme Court
டெல்லி: நடப்பாண்டில் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது பொது நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடைபெறாது என்று இடைக்கால தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்திருக்கிறது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஒரே நுழைவுத் தேர்வு நடத்த அகில இந்திய மருத்துவ கவுன்சில் முடிவு செய்தது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தன.

இதேபோல் தனியார் மருத்துவக் கல்லூரிகள் இது தொடர்பாக 23 வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தன. இவை அனைத்தையும் ஒரே வழக்காக விசாரிக்க அகில இந்திய மருத்துவக் கவுன்சில் கோரியது. இதனால் இந்த வழக்குகள் அனைத்தும் ஒரே வழக்காக விசாரிக்கப்பட்டன.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று இடைக்காலத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இதில் பொதுநுழைவுத் தேர்வு அடிப்படைட்யில் நடப்பாண்டு மருத்துவ சேர்க்கை இருக்காது... நடப்பாண்டில் பழைய முறைப்படியே மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு ஜூலை முதல் வாரத்தில் வழங்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

English summary
The Supreme Court is likely to deliver its verdict on Monday on the issue of validity of the National Eligibility and Entrance Test (NEET) for admission to MBBS/postgraduate/dental and postgraduate courses.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X