For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டிரைக்கில் குதிக்கிறார்கள் என்எல்சி ஊழியர்கள்.. மின் விநியோகம் பாதிக்கப்படும்?

Google Oneindia Tamil News

நெய்வேலி: நெய்வேலி அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மே 20ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை பார்க்கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 16.4.2013 அன்று தீர்ப்பு வெளியானது. அந்த தீர்ப்பில் சீனியாரிட்டி அடிப்படையில் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தீர்ப்பின்படி ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்யக்கோரி, தொழிற்சங்க கூட்டமைப்பில் இடம்பெற்ற ஒப்பந்த தொழிலாளர் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இதற்கிடையே உச்சநீதிமன்ற ஆணையை நிறைவேறுவது தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

இதையடுத்து, என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் வரும் 20-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

English summary
NLC contract workers are set to strike work from May 20.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X