For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காற்றாலை மின் உற்பத்தி அமோகம்- சென்னையில் 2 நாட்களாக மின்வெட்டே இல்லை!

Google Oneindia Tamil News

Power cuts come down in southern Tamil Nadu as wind power goes high
நெல்லை: காற்றாலை மின் உற்பத்தி அபரிமிதமாக இருப்பதால் தென் மாவட்டங்களில் மின்தடை நேரம் வெகுவாக குறைந்துள்ளது. அதேசமயம், சென்னை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கிட்டத்தட்ட மின்வெட்டேஇல்லை. கடந்த 2 நாட்களாக சென்னை மக்கள் தடையில்லா மின்விநியோகத்தை அனுபவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த பல வருடங்களாக பகல் மற்றும் இரவு நேரத்தில் தொடர்ந்து மின்தடை செய்யப்பட்டுவருகிறது. சென்னையில் தினமும் இரண்டு மணி நேரமும், பிற மாவட்டங்களில் தினமும் 6 மணி முதல் 8 மணி நேரமும், கிராமப்புறஙகளில் 10 மணி நேரமும் மின்தடை செய்யப்படுகிறது.

தடையில்லா மின்சாரம் வழங்க கோரியும், மின்தடை நேரத்தை முறையாக அறிவிக்க கோரியும் பல்வேறு அரசியல் கட்சிகள், பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. மத்திய தொகுப்பில்இருந்து தமிழகத்தி்ற்கு கூடுதலாக மின்சாரம் வழங்க தமிழக அரசும் கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில் காற்றாலை மின் உற்பத்தி கடந்த வாரம் வெகுவாக குறைந்தது. இதனால் கடந்த இரு வாரங்களாக தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்தடை நேரம் அதிகரிக்கப்பட்டது. தினமும் 6 மணி நேரம் முதல் 9 மணி நேரம் வரை மின்தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. ஆனால் நேற்றுமுன்தினத்தில் இருந்து தென்மாவட்டங்களில் அதிக அளவு காற்று வீச தொடங்கியதால் மின் உற்பத்தி அதிகரிக்க தொடங்கியுள்ளது.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும், மின் இரவில் அவ்வப்போது மின்தடையும் ஏற்படும். தற்போது காற்றாலை மின்உற்பத்தி அதிகரிப்பால் மின்தடை மேலே கண்ட நேரத்தில் இல்லை. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அதேசமயம் சென்னையில் பெரும்பாலான இடங்களில் கடந்த 2 நாட்களாக மின்வெட்டு இல்லை. இதனால் மக்கள் குஷியடைந்துள்ளனர். அவியும் வெயிலுக்கு இது சற்றே சந்தோஷமான செய்தி என்று மக்கள் கூறுகின்றனர்.
.

English summary
Power cuts have come down considerably in southern Tamil Nadu as wind power goes high. In Chennai, there is no power cut in most of the areas for the last two days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X