For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் பயங்கரம்: அன்னையர் தின ஊர்வலத்தில் துப்பாக்கிச்சூடு 19 பேர் படுகாயம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் நடைபெற்ற அன்னையர் தின பேரணியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்வத்தில் 2 சிறுவர்கள் உள்பட 19 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆண்டுதோறும் மே இரண்டவது ஞாயிறன்று அன்னையர் தினம் உலக அளவில் கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவில் அன்னையர்களின் புகழைப் பரப்பும் பேரணியும் நடத்தப்படுகிறது.

நேற்று நியூ ஆர்லியன்ஸ் நகரில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. அப்போது பேரணியில் பங்கேற்றவர்களை நோக்கி மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 10 பெண்கள் 7 ஆண்கள் 10 வயதுடைய ஒரு சிறுமியும், 7 வயது சிறுவனும் காயமடைந்தனர். உடனடியாக அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Nineteen shot in New Orleans Mother's Day parade

காயமடைந்தவர்களில் நான்கு பேர் ஆபரேசன் செய்யவேண்டிய நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிக்சூடு சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் பேரணியின் போது மூன்று பேர் அங்கிருந்து நழுவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவில் பாஸ்டன் மரதன் போட்டியிகளின் போது இடம்பெற்ற தீவிரவாத குண்டுத்தாக்குதலில் பலர் பலியானார்கள், இப்போது அன்னையர் தின பேரணியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.

English summary
Nineteen people including two children were shot in New Orleans on Sunday when gunfire erupted at a Mother's Day parade, and city police said they were searching for three suspects.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X