For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குலுக்கலில் மேயர் ஆன 4 வயது அமெரிக்க சிறுவன்…!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: லாட்டரியில குலுக்கல்னா பணம் கிடைக்கும், ஆனா 4 வயசு குட்டிப்பையனுக்கு மேயர் பதவியே லாட்டரியா விழுந்திருக்கு அமெரிக்காவுல...

நம்மூரில், நான்கு வயது சிறுவனுக்கு என்ன வேலை இருக்கும் ப்ளே ஸ்கூலுக்கு போவதைத்தவிர... ஆனால், அமெரிக்காவில் நான்கு வயதேயான சிறுவன் மேயர் பதவிக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு திறமையாக செயல்பட்டு அசத்துகிறானாம்.

ராபர்ட் துப்ட்ஸ்(4) என்ற அச்சிறுவனுக்கு, மினிசோட்டா நகருக்கு அருகேயுள்ள டோர்செட் என்ற ஊர் தான் இந்த பதவியை கொடுத்து கவுரவித்துள்ளது.

அரசியல்ல பாஸ் ஆகிட்டேனே…

அரசியல்ல பாஸ் ஆகிட்டேனே…

மேயர் ராபர்ட் இன்னும் மழலையர் பள்ளிப் படிப்பை கூட நிறைவு செய்யவில்லை. அவனுக்கு மேயர் பதவி குலுக்கல் முறை தேர்வு அதிர்ஷ்டத்தில் கிடைத்திருக்கிறது.

சின்ன ஊர்… சின்ன மேயர்…

சின்ன ஊர்… சின்ன மேயர்…

இன்னொரு விஷேஷம் என்னவென்றால், இந்த ஊரின் மொத்த மக்கள் தொகை 22 பேர் மட்டுமே.

வாயாடி மேயர்ர்…

வாயாடி மேயர்ர்…

மேயர் ராபர்ட் பேச்சாற்றல் மிக்கவனாம். அவனிடம் கேள்வி கேட்டு யாரும் மீள முடியாதாம். பதில் சரளமாக வரும். கையில் ‘ஸ்டிரிக்' (கைத்தடி) பிடித்துக் கொண்டு ஊரின் வீதிகளில் வலம் சென்று குறைபாடுகளை அறிகிறானாம்.

சூப்பர் ஐடியாஸ்…

சூப்பர் ஐடியாஸ்…

தூண்டிலில் இரையை எப்படி வைத்து மீன் பிடிக்க வேண்டும் என்றும் யோசனை கூறுகிறானாம். அவனுடைய திறமையான செயல்பாட்டை ஊர்மக்கள் புகழ்ந்து தள்ளுகிறார்கள்..

கண்டுபிடி.. அந்த கள்ளியைக் கண்டுபிடி

கண்டுபிடி.. அந்த கள்ளியைக் கண்டுபிடி

தனக்கு சோபியா என்ற காதலி இருப்பதாகவும் ராபர்ட் கூச்சம் ஏதுமின்றி ஒப்புக்கொள்கிறான். இந்த பெண் எங்கு இருக்கிறாள்? மேயரின் இதயத்தில் எப்படி இடம் பிடித்தாள் என்பது தெரியவில்லை.

ஏன் பாஸ் உங்க ஊர்ல வாரிசு அரசியல்லாம் கிடையாதா...?

English summary
Being a politician is no easy gig—just ask 4-year-old Dorset, Minnesota mayor Robert "Bobby" Tufts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X